பதிவு செய்த நாள்
14 செப்2018
00:44
நாமக்கல்:தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 350 காசுகளாக இருந்த கொள்முதல் விலை, 10 காசு உயர்த்தப்பட்டு, 360 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
பிற மண்டலங்களில் முட்டை விலை விபரம் (காசுகளில்): சென்னை, 365, ஐதராபாத், 346, பர்வாலா, 363, மும்பை,- 393, மைசூரு, 366, பெங்களூரு, 365, கோல்கட்டா, 408, டில்லி, 387.
இதேபோல் முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், விலையை கிலோவுக்கு, 1 ரூபாய் உயர்த்த முடிவு செய்தனர். இதனால், 79 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
பல்லடத்தில் கறிக்கோழி விலை விலை, கிலோ, 63 ரூபாயில் இருந்து, 60 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. கேரளா, தமிழகத்தில் கொள்முதல் விலை சரிவால், முட்டை விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என, பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|