பதிவு செய்த நாள்
16 செப்2018
00:54

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, ‘இர்கான் இண்டர்நேஷனல்’ நிறுவனம், ரயில்வே, விமானம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில், பொறியியல் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, நாளை துவங்கி, 19ம் தேதி முடிவடைகிறது. பங்கு ஒன்றின் விலை, 470 -– 475 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வெளியீட்டின் மூலம், இந்நிறுவனம், 465 – -470 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.சில்லரை முதலீட்டாளர்களுக்கு, ஒரு பங்கின் விலையில், 10 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒருவர், குறைந்தபட்சம், 30 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.இந்நிறுவனம், தகுதியுள்ள ஊழியர்களுக்கு, 5 லட்சம் பங்குகளை ஒதுக்கியுள்ளது.
இர்கான் இண்டர்நேஷனல், நடப்பு, 2018 –- 19ம் நிதியாண்டில், புதிய பங்கு வெளியீடு மேற்கொள்ளும், ஒன்பதாவது நிறுவனம். அத்துடன், பங்கு விலக்கல் திட்டத்தின் கீழ், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கும், இரண்டாவது பொதுத் துறை நிறுவனமாகும்.இந்நிறுவனத்திற்கு, வங்கதேசம், இலங்கை, தென் ஆப்ரிக்கா, அல்ஜீரியா ஆகிய நாடுகளில், 26 திட்ட அலுவலகங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|