பதிவு செய்த நாள்
20 நவ2018
01:07

புதுடில்லி : மத்திய அரசு, அடுத்த வாரம், ‘சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட்’ வெளியீட்டின் மூலம், 14 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மூன்று முறை, ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, ஐ.ஓ.சி., உட்பட, 10 நிறுவனங்கள் அடங்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட் வெளியீடுகளில், 11,500 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.அடுத்த வாரம், நான்காம் கட்ட வெளியீடு மூலம், 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சில்லரை முதலீட்டாளர்களுக்கு, வெளியீட்டு விலையில், 3.5 – 4 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.
கெயில், இன்ஜினியர்ஸ் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆகிய, மூன்று நிறுவனங்களில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 55 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.அதனால், இந்த, மூன்று நிறுவனங்களுக்கு பதிலாக, எம்.ஓ.ஐ.எல்., -– கே.ஒய்.ஓ.சி.எல்., உட்பட, நான்கு நிறுவனங்கள் சேர்க்கப்பட உள்ளன.
நடப்பு நிதியாண்டில், இதுவரை, பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனை மூலம், மத்திய அரசு, 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டியுள்ளது. முழு நிதியாண்டில், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|