பதிவு செய்த நாள்
11 டிச2018
23:41

புதுடில்லி:ஷியாம் மெட்டாலிக்ஸ் அன்ட் எனர்ஜி நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடமிருந்து பெற்றுள்ளது.
கோல்கட்டாவைச் சேர்ந்த, ஷியாம் மெட்டாலிக்ஸ் நிறுவனம், உருக்கு, அலாய் உள்ளிட்ட உலோக தயாரிப்பில், முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றாகும்.இந்நிறுவனத்துக்கு, மேற்கு வங்கத்தில் இரண்டு தொழிற்சாலைகளும், ஒடிசாவில் ஒரு தொழிற்சாலையும் உள்ளன.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 900 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, ஆகஸ்ட் மாதத்தில் செபியிடம் விண்ணப்பித்திருந்தது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியால், கடனை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்காகவும், அதன் துணை நிறுவனமான, எஸ்.எஸ்.பி.எல்., நிறுவனத்தின் நிதி உதவிக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் மற்றும் ஜெ.எம்., பைனான்ஷியல் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|