பதிவு செய்த நாள்
01 ஜன2019
23:46
புதுடில்லி:கடந்தாண்டு, பல்வேறு ஏற்ற, இறக்கத்தை சந்தித்த போதிலும், இந்தியா, சீனாவை விஞ்சி, உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சியை கண்டு வரும் நாடு என்ற
சிறப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நம் நாடு, கடந்த ஆண்டு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு
வீழ்ச்சி, அமெரிக்காவின் சுங்க வரி உயர்வு, சர்வதேச வர்த்தகப் போர் பதற்றம் உட்பட, பல்வேறு சவால்களை சந்தித்தது.அத்தகைய சூழலிலும், பொருளாதார வளர்ச்சியில், சீனாவை விஞ்சி முன்னேற்றம் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.7 சதவீதமாக இருந்தது.நடப்பு,
2018- – 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல்
காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8.2 சதவீதமாக உயர்ந்து
இருந்தது.இது, ஜூலை – செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலண்டில், 7.1 சதவீதமாக சரிவடைந்தது.
இதே காலத்தில், சீனா, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளது.கடந்த ஆண்டு, ஜனவரி – மார்ச் வரையிலான காலாண்டில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 6.8 சதவீதமாக இருந்தது.இது, ஏப்ரல் – ஜூன் காலாண்டில், 6.7 சதவீதமாக குறைந்தது.இது, ஜூலை – செப்டம்பர் காலாண்டில், மேலும் குறைந்து, 6.5 சதவீதமாக வீழ்ச்சிகண்டுள்ளது.
கடந்த ஆண்டின், முதல் அரையாண்டில், சீனாவின் பொருளாதாரம், 6.8 சதவீத அளவிற்கே
வளர்ச்சி கண்டுள்ளது.நடப்பு
நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.8 சதவீதமாக
இருக்கும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’கணித்திருந்தது. இதை, தற்போது, 7.2 சதவீதமாக மறுமதிப்பீடு செய்துள்ளது.இதற்கு, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பண நெருக்கடி, வங்கி கடன் வளர்ச்சி குறைவு போன்றவை காரணம் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|