மொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்: ஐ.நா., அறிக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்: ஐ.நா., அறிக்கை ...  புதிய வெள்ளை பூண்டு விலை அதிகரிப்பு புதிய வெள்ளை பூண்டு விலை அதிகரிப்பு ...
ரிலையன்ஸ் ரீடெய்ல் அபாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2019
23:24

புதுடில்லி : முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், வருவாய் வளர்ச்சியில், உலகளவில், 95 நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, 94வது இடத்தை பிடித்திருப்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த, டிலோட்டி நிறுவனம், இந்தாண்டிற்கான, சர்வதேச சில்லரை விற்பனை துறையின் வருவாய் குறியீட்டை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில், 250 சில்லரை விற்பனை நிறுவனங்கள், 2017ம் நிதியாண்டில் ஈட்டிய வருவாய் அடிப்படையில், புள்ளிவிபரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய நிறுவனங்களின் வருவாய், 2018, மார்ச் நிலவரப்படி கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த, 2016ம் நிதியாண்டில், வேகமான வளர்ச்சி கண்ட, 50 நிறுவனங்களின் பட்டியலில், முதன் முறையாக, ரிலையன்ஸ் ரீடெய்ல் இடம் பெற்றது.இந்நிறுவனம், 2017ம் நிதியாண்டில், வருவாயை இரு மடங்கு பெருக்கியுள்ளது. அதனால், 250 நிறுவனங்களில், 95 இடங்கள் முன்னேறி, 94வது இடத்தை பிடித்துள்ளது.

அமேசான்:
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின், மளிகை பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள், ஆடைகள் ஆகிய பிரிவுகளின் வர்த்தகம் மிகச் சிறப்பாக உள்ளது. இதற்கு, கடைகளின் விரிவாக்கமும் துணை புரிந்துள்ளது.ஆய்வில் பங்கேற்ற சில்லரை விற்பனை நிறுவனங்களின் மொத்த வருவாயில், ‘டாப் 10’ நிறுவனங்களின் பங்கு, 0.9 சதவீதம் உயர்ந்து, 31.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த பட்டியலில், அமேசான் நிறுவனம், இரண்டு இடங்கள் முன்னேறி, நான்காவது இடத்தை பிடித்துள்ளது. வால்மார்ட், தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், 6,400 நகரங்களில், 9,907 சில்லரை விற்பனை கடைகளை நிர்வகித்து வருகிறது.

நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், இந்நிறுவனத்தின் வருவாய், கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, இரு மடங்கு உயர்ந்து, 93ஆயிரத்து, 903 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சில்லரை விற்பனையில்‘டாப் 5’ நிறுவனங்கள்:
வால்மார்ட் காஸ்ட்கோ க்ரோகர் அமேசான் ஷ்வார்ஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)