பதிவு செய்த நாள்
25 ஜன2019
07:04
திருச்சி : ஜி.எஸ்.டி., செலுத்துவோருக்காக, புதிதாக தமிழ் வலைதளம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஜி.எஸ்.டி., வரி ஆலோசகர்கள் சங்கத்தின் மாநில மாநாடும், இரண்டாம் ஆண்டு விழாவும் திருச்சியில் நடந்தது.ஐ.சி.ஏ.ஐ., ராஜேந்திர குமார், பொருளாதார நிபுணர், ஆனந்த் சீனிவாசன் மற்றும் சங்கச் செயலர், பஷீர் அலி, ஒருங்கிணைப்பாளர், பாபுதீன், மாநாட்டு தலைவர், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில், குறைந்தபட்ச வரி விதிப்பு, 5 சதவீதமாகவும், அதிகபட்சம், 18 சதவீதமாகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச ஒப்பந்த பணிகளுக்கான வரி சீரமைப்பு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். சுகாதாரம், கல்வி, விவசாய இடுபொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., வரி வதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
ஏற்றுமதியாளர்களுக்கான உள்ளீட்டு வரித்தொகை உடனுக்குடன் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்பன உட்பட, 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மாநாட்டில், ஜி.எஸ்.டி., வரி செலுத்துவோருக்கான புதிய தமிழ் வலைதளம் துவக்கப்பட்டது.
இது குறித்து, ஜி.எஸ்.டி., வரி ஆலோசகர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:அரசால் கொண்டு வரப்படும் புதிய வரிச்சட்டம், வரி சீர்திருத்தச் சட்டம் போன்றவற்றை கடைநிலை பயனாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், www.tngstp.com என்ற தமிழ் வலைதளம் துவக்கப்பட்டுள்ளது. இது, கணக்காளர்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும். இந்த வலை தளத்தில், பலவித வரி விதிப்புகள் அனைவருக்கும் புரியும்படி தமிழில் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|