நீங்­கள் அவ­சி­யம் பெற்­றி­ருக்க வேண்­டிய காப்­பீடு பாலி­சி­கள்நீங்­கள் அவ­சி­யம் பெற்­றி­ருக்க வேண்­டிய காப்­பீடு பாலி­சி­கள் ... தங்கம் விலை ரூ.104 சரிவு தங்கம் விலை ரூ.104 சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சந்­தை­யின் அச்­சம் குறை­யுமா; பெரு­குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
00:25

வெள்­ளி­யன்று தாக்­கல் செய்­யப்­பட்ட இடைக்­கால பட்­ஜெட், வரும் பொதுத் தேர்­த­லுக்­கான கொந்­த­ளிக்­கும் சந்தை சூழலை உரு­வாக்கி விட்­டது என்றே சொல்ல வேண்­டும்.

கடந்த சில வாரங்­க­ளாக, சந்­தை­யின் போக்­கில் ஒரு வித அச்­சம் தெளி­வாக தெரிந்­தது. அது ஆட்சி மாற்­றமோ, நிலை­யற்ற ஆட்­சியோ அமை­யும் என்ற எண்­ணத்­தால் ஏற்­பட்­டது என்­பது, நாம் அனை­வ­ரும் அறிந்­ததே.அப்­படி ஒரு நிலை­யற்ற ஆட்சி அமைந்­தால், சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் தங்­கள் இந்­திய முத­லீ­டு­களை எப்­படி அணு­கு­வர் என்­கிற கவலை, உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் மன­தில் ஏற்­பட்டு விட்­டது.

நிலை­யான ஆட்சி பற்­றிய முத­லீட்­டா­ளர்­க­ளின் அனைத்து எதிர்­பார்ப்­பு­களும் நியா­ய­மா­னது தானா? ஆட்சி மாற்­றம் என்­பது, ஜன­நா­ய­கத்­தில் நடக்­கக்­கூ­டிய இயல்­பான நிகழ்வு. அதற்கு, ஏன் முத­லீட்­டா­ளர்­கள் அஞ்ச வேண்­டும்?

மத்­தி­யில் நிலை­யான ஆட்சி, சீரான பொரு­ளா­தார கொள்­கை­கள், வளர்ச்­சிக்கு வழி­வ­குக்­கும் கொள்­கை­கள், மக்­கள் நலம் சார்ந்த பொரு­ளா­தார மேலாண்மை ஆகி­யவை உள்­ள­டக்­கிய ஆட்சி, சந்­தைக்கு மிக அத்­தி­யா­வ­சி­ய­மா­கும்.கடந்த ஆண்டு சந்­தை­யில் ஏற்­பட்ட வீழ்ச்­சி­யில் இருந்து மீள, முத­லீட்­டா­ளர்­கள் ஆர்­வ­மாக உள்­ள­னர்.

அவர்­க­ளின் எதிர்­பார்ப்பு நிறை­வேற, சந்­தை­யில் தொடர்ந்து பன்­னாட்டு முத­லீ­டு­களும், நேரடி அன்­னிய முத­லீ­டு­களும் பெருக வேண்­டும் என்­பதே அனை­வ­ரின் எதிர்­பார்ப்பு. அப்­படி அமைந்­தால், தங்­கள் சந்தை முத­லீ­டு­கள் உரிய வெற்றி அடை­யும் என்­பதே முத­லீட்­டா­ளர்­க­ளின் நம்­பிக்கை.

ஆட்­சி­யில் இருக்­கும் கட்­சியே தொடர்ந்து நிலைக்க வேண்­டும் என்ற எண்ண ஓட்­டம், பெரும்­பா­லான உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளின் எதிர்­பார்ப்­பாக இருப்­ப­தும் இதைச் சார்ந்­ததே ஆகும்.மேலும், இந்த அரசு தங்­க­ளுக்கு போதிய சலு­கை­கள் தர­வில்லை என்­கிற வருத்­தம், அதன் ஆத­ர­வா­ளர்­க­ளின் மத்­தி­யில் இருப்­ப­தும் உண்மை. இதற்கு கார­ணம், இந்த அரசு, உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் மீது தொடர்ந்து பல வித­மான வரி­களை சுமத்­தி­யது.

இருப்­பி­னும், அதை முத­லீட்­டா­ளர்­கள் ஏற்று அர­சுக்கு ஆத­ரவு தந்­த­னர். கார­ணம், நிலை­யான ஆட்சி தொடர வேண்­டிய அவ­சி­யத்தை அவர்­கள் உணர்ந்­தி­ருந்­த­தால் தான்.இந்த சூழ­லில், அடுத்து ஆட்சிக்கு யார் வரு­வர் என்­பதை யூகிக்க துடிக்­கும் சந்­தைக்கு, இந்த பட்­ஜெட் ஒரு நற்­செய்­தி­யாக அமைந்­தது.வாக்­கா­ளர்­கள் மத்­தி­யில் அர­சுக்கு ஆத­ரவு தொட­ரும் என்ற எதிர்­பார்ப்பு கூடி உள்­ளது.

இனி வரும் வாரங்­களில், கருத்­துக் கணிப்­பு­கள் மேலும் சாத­க­மா­னால், சந்தை மேலும் உயர வாய்ப்பு அதி­கம் என்றே தோன்­று­கிறது. மாறாக, மீண்­டும் இழு­பறி நிலை ஏற்­பட்­டால், சந்­தை­யின் அச்­சம் பெரு­கும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
பங்குச்சந்தை

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)