நீங்­கள் அவ­சி­யம் பெற்­றி­ருக்க வேண்­டிய காப்­பீடு பாலி­சி­கள்நீங்­கள் அவ­சி­யம் பெற்­றி­ருக்க வேண்­டிய காப்­பீடு பாலி­சி­கள் ... தங்கம் விலை ரூ.104 சரிவு தங்கம் விலை ரூ.104 சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கழுத்தை இறுக்­குமா நிதி பற்­றாக்­குறை?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
00:33

இடைக்­கால பட்­ஜெட் சமர்ப்­பிக்­கப்­பட்டு விட்­டது. புதிய திட்­டங்­கள், ஒதுக்­கீ­டு­கள், உத­வித் தொகை­கள் என்று ஒரு பெரிய கொண்­டாட்ட மன­நிலை முடிந்து, கொஞ்­சம் நிதா­ன­மாக இதே பட்­ஜெட்டை வாசிக்­கத் துவங்­கி­யுள்­ள­னர் நிபு­ணர்­கள். மக்­க­ளை கவ­ரும் பட்­ஜெட்­டில் உள்ளஉண்­மை­யான சிக்­கல்­கள் படிப்­ப­டி­யாக வெளியே வரு­கின்­றன.

மிக முக்கியமாக, விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும், 6,000 ரூபாய் உதவித் தொகையால், இந்தியாவுக்கு ஏற்படவிருக்கும் நிதிப் பற்றாக்குறை கவனத்தைக் கவர்கிறது.மார்ச் மாதத்தோடு முடிவடையும் நிதியாண்டில், நாம் இலக்காக நிர்ணயித்து இருந்த நிதிப் பற்றாக்குறை, 3.3 சதவீதம். அது தற்போது, 3.4 சதவீதமாக உயரப் போகிறது.

அடுத்த நிதியாண்டும், இதே, 3.4 சதவீதமாக நிதிப் பற்றாக்குறை நீடிக்கும் என்று தெரிவித்தார் பியுஷ் கோயல்.இந்தியாவின் மொத்த வரவுக்கும், அதன் செலவுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையே நிதிப் பற்றாக்குறை என்று குறிப்பிடுகிறோம்.நிதிப் பற்றாக்குறை லேசாக உயர்வதால் ஒன்றும் பிரச்னை இல்லை என, ஒருசில நிபுணர்கள், இடைக்கால பட்ஜெட் வழங்கப்பட்ட அன்று கருத்து தெரிவித்தனர். ஆனால், அது அவ்வளவு லேசானது அல்ல என்பதை இப்போது படிப்படியாக புரிந்துகொள்ளத் துவங்கியுள்ளனர்.

ஜி.எஸ்.டி., வசூல்

நிதிப் பற்றாக்குறை அதிகமானால் என்ன ஆகும்? அரசால் சர்வதேச சந்தையிலோ, மக்களிடமிருந்தோ கடன் வாங்க முடியாது அல்லது கூடுதல் வட்டி கொடுக்க வேண்டும். அப்போது தான் நிதியைத் திரட்ட முடியும்.ஏன் பற்றாக்குறை அளவு உயர்ந்துவிட்டது? முக்கியமான காரணம், மத்திய அரசு திரட்டும் ஜி.எஸ்.டி., வரி வசூலில் உள்ள தொய்வு. இந்த நிதியாண்டில், 7.43 லட்சம் கோடி ரூபாய், சி.ஜி.எஸ்.டி., வரியாகத் திரட்டப்படும் என்று சென்ற ஆண்டு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

இப்போது திருத்தப்பட்ட மதிப்பீட்டில் அது, 6.43 லட்சம் கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. அதாவது, 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் குறைவு.நிறுவன வரிகளின் மூலம் இழப்பைச் சரிக்கட்டலாம் என, மத்திய அரசு நினைக்கிறது. அது ஏற்கனவே கார்ப்பரேட் வரி மூலம், 6.21 லட்சம் கோடி ரூபாய் திரட்டுவதாக உத்தேசித்து இருந்தது. தற்போது, அதில் இன்னும், 50 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்து, 6.71 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என திருத்திய மதிப்பீடு கூறுகிறது.

வட்டி விகிதம்

பங்கு விலக்கல் திட்டங்கள் மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட முடியும் என, மத்திய அரசு நம்புகிறது. ஆனால், யதார்த்த நிலையோ வேறு. கடந்த, 1ம் தேதி வரையான காலகட்டத்தில், பங்கு விலக்கல் திட்டத்தின் மூலம் பெற்றுள்ளது, 35 ஆயிரத்து, 532 கோடி ரூபாய் மட்டுமே. இதில், அடுத்த நிதியாண்டில், 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்படும் என, இடைக்கால பட்ஜெட் மதிப்பீடு செய்திருக்கிறது.

பாதிப்புகள் என்ன?

வரும், 7ம் தேதியன்று நடைபெறவிருக்கும் ரிசர்வ் வங்கியின் நிதி ஆலோசனைக் குழு சந்திப்பு, இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.ஒருபக்கம் அரசு வழங்கியுள்ள பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்கள் மூலமாக, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால், வளர்ச்சி ஏற்படும். வளர்ச்சி ஏற்பட்டால், கூடவே பணவீக்கமும் ஏற்படும்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, நிதி ஆலோசனைக் குழுவின் முதன்மையான பணிகளில் ஒன்று. மேலும் நிதிப் பற்றாக்குறை, 3.4 சதவீதமாக இருக்கும் என்ற உண்மையையும் அது கருத்தில் கொள்ளும்.அதனால், வரவிருக்கும் நிதி ஆலோசனைக் குழுவின் சந்திப்பில், வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படாது. இப்போதிருக்கும் வட்டி விகிதங்களே தொடர்வதற்கான வாய்ப்பே அதிகம்.நிதிப் பற்றாக்குறையால் பாதிப்படையக் கூடியவர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள். தற்போது, 3.4 சதவீதமாக இருக்கும் நிதிப் பற்றாக்குறை படிப்படியாக, 3 சதவீத அளவுக்குக் குறையும் என்ற மத்திய அரசின் வாதத்தை, இவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

அன்னிய முதலீடு

அடுத்து வரவிருக்கும் அரசு, நிச்சயம் கூடுதல் செலவுகளை மேற்கொண்டு ஆகவேண்டும். அதற்கான நிதியாதாரங்கள் இல்லாத நிலையில், நிதிப் பற்றாக்குறையின் அளவு மேலும் உயரவே வாய்ப்பு அதிகம்.இவர்களும் அடுத்து வரவிருக்கும் நிதி ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளுக்காகவே காத்திருப்பர். ஒருவேளை அது வட்டி விகிதத்தை மேலும் குறைக்குமானால், பங்குச் சந்தையில் மீண்டும் ஒரு ஏற்றம் இருக்கும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தைக் கொட்டுவர்; இல்லையெனில், அவர்கள் தங்களிடம் உள்ள பங்குகளை விற்றுவிடவே விரும்புவர்.

நிதிப் பற்றாக்குறை அதிகமானால், அன்னிய முதலீட்டாளர்கள் ஈட்டக்கூடிய வருவாய் குறைந்து போய்விடும். அதனால், இந்தியப் பங்குச் சந்தையில் தொடர்ந்து இருக்க விரும்ப மாட்டார்கள்.பொதுமக்களுக்கு இதில் என்ன செய்தி? மத்தியமர்களுக்கும், விவசாயிகளுக்கும் விருப்பமான விஷயங்களை மத்திய அரசு தெரிவித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதற்கான செலவுகள் அரசின் கழுத்தை நெரிக்கப் போவது உறுதி.

ஒருபக்கம் தேவைப்படுகிறவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது அவசியம். அதேசமயம், அது ஒரு கட்டுப்பாட்டுக்குள், நெறிமுறைக்குள் இருக்க வேண்டும். குறையும் வருவாயை ஈடு கட்டுவதற்கான மாற்று வருவாய் இனங்கள் என்னென்ன என்பது கண்டறியப்பட வேண்டும். இல்லையெனில், மத்திய அரசு மேற்கொள்ளும் அத்தனை செலவுகளும், மக்கள் தலைமேல் தான் வந்து விடியும். விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும்.

பெட்ரோல், டீசல் விலைகள் உயரலாம். அதனுடைய பாதிப்புகள், நம் பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.வரவுக்குள் செலவு செய்வது ஒன்றே, என்றைக்கும் பலன் தரும் உத்தி. கையை மீறிப் போகும் செலவுகளால், எப்போதும் திண்டாட்டம் தான். பல உலக நாடுகளும், நிதி அமைப்புகளும் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டியே, நம்முடைய நாட்டின் கிரெடிட் ரேட்டிங்கைக் குறைத்து விடுவர்.

முதலீட்டுக்கு உகந்த நாடாக இருப்பது, படிப்படியாக அந்த அந்தஸ்தை இழக்கத் துவங்கி விடுவோம்.மேலும், 3.4 சதவீதம் நிதிப் பற்றாக்குறை என்பது லேசான விஷயம் அல்ல. அதை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்வதே, இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்துக்கு நல்லது.

ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)