15வது நிதிக் குழு உறுப்பினராகஅஜய் நாராயண் ஜா நியமனம்15வது நிதிக் குழு உறுப்பினராகஅஜய் நாராயண் ஜா நியமனம் ...  போலி பில் தயாரிப்பு அரசு தீவிர நடவடிக்கை போலி பில் தயாரிப்பு அரசு தீவிர நடவடிக்கை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சூடு பிடிக்கிறது பயணியர் கார் விற்பனை:இரு நிறுவனங்கள் இரட்டை இலக்க வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2019
23:40

புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், பயணியர் கார் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. ‘ஹோண்டா, மகிந்திரா’ நிறுவனங்கள், கார் விற்பனையில், இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டுள்ளன.

மாருதி சுசூகி, கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. பிப்ரவரியில், இந்நிறுவனத்தின் பயணியர் கார் பிரிவின் உள்நாட்டு விற்பனை, ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 100 ஆக அதிகரித்துள்ளது. இது, 2018 ஜனவரியில், ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 900 ஆக இருந்தது.இதே காலத்தில், ‘காம்பாக்ட்’ பிரிவில், ‘வேகன் ஆர், ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையர் உள்ளிட்ட கார்கள் விற்பனை, 11.4 சதவீதம் உயர்ந்து, 65 ஆயிரத்து, 213லிருந்து, 72 ஆயிரத்து, 678 ஆக அதிகரித்துள்ளது.

‘எஸ் – கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, ஜிப்ஸி’ உள்ளிட்ட, பன்முக பயன்பாட்டு கார் பிரிவின் விற்பனை, 7.4 சதவீதம் ஏற்றம் கண்டு, 20 ஆயிரத்து, 324லிருந்து, 21 ஆயிரத்து, 834 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இதே காலத்தில், ‘ஆல்டோ’ உள்ளிட்ட சிறிய கார் பிரிவின் விற்பனை, 26.7 சதவீதம் சரிவடைந்து, 33 ஆயிரத்து, 789லிருந்து, 24 ஆயிரத்து, 751 ஆக குறைந்துள்ளது.

ஹோண்டா கார்ஸ்பிப்ரவரியில், இந்நிறுவனம் உள்நாட்டில், 13 ஆயிரத்து, 527 கார்களை விற்பனை செய்த வகையில், 16 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இவ்விற்பனை, 2018, பிப்ரவரியில், 11 ஆயிரத்து, 650 ஆக இருந்தது.‘அமேஸ், சிட்டி, டபிள்யுஆர் – வி’ ஆகிய மாடல்கள், விற்பனை வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளன.மகிந்திராஇந்நிறுவனத்தின் கார் விற்பனை, பிப்ரவரியில், 17 சதவீதம் அதிகரித்து, 26 ஆயிரத்து, 109 ஆக உயர்ந்துள்ளது.

இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 22 ஆயிரத்து, 389 ஆக காணப்பட்டது. சந்தையில், ‘எக்ஸ்யுவி300’ கார் அறிமுகம் காரணமாக, பன்முக பயன்பாட்டு கார் பிரிவு, விற்பனையில், 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.டாடா மோட்டார்ஸ்கடந்த பிப்ரவரியில், இந்நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை, 2 சதவீதம் அதிகரித்து, 18 ஆயிரத்து, 110 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, பிப்ரவரியில், 17 ஆயிரத்து, 771 ஆக இருந்தது.

புதிய தலைமுறை கார்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பால், சவாலான சூழல் நிலவிய போதிலும், விற்பனையில் வளர்ச்சி காண முடிந்ததாக, இந்நிறுவனம் கூறியுள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர்கடந்த பிப்ரவரியில், இந்நிறுவனத்தின் பயணியர் கார் பிரிவின் உள்நாட்டு விற்பனை, 11 ஆயிரத்து, 760 ஆக சற்று குறைந்துள்ளது. இது, 2018 பிப்ரவரியில், 11 ஆயிரத்து, 864 ஆக இருந்தது.

எனினும், இந்தாண்டு ஜனவரியை ஒப்பிடும் போது, பிப்ரவரியில், நுகர்வோரிடம், கார் வாங்கும் மனநிலை அதிகரித்துள்ளது என, டொயோட்டா கிர்லோஸ்கர் தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகனம்

கடந்த பிப்ரவரியில், இரு சக்கர வாகனங்கள்பிரிவில், டி.வி.எஸ்., மோட்டார் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் உள்நாட்டு இரு சக்கர வாகன விற்பனை, இரண்டு லட்சத்து, 31 ஆயிரத்து, 582 ஆக உயர்ந்து உள்ளது. இது, 2018 பிப்ரவரியில், இரண்டு லட்சத்து, 30 ஆயிரத்து, 353 ஆக இருந்தது.இதே காலத்தில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இரு சக்கர வாகன விற்பனை, இரண்டு லட்சத்து, 14 ஆயிரத்து, 23லிருந்து, இரண்டு லட்சத்து, 21 ஆயிரத்து, 706 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)