பதிவு செய்த நாள்
22 ஏப்2019
18:09

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 100 புள்ளிகளும் சரிவுடன் துவங்கின. ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கூடாது என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும், உலகளவில் பங்குச்சந்தைகளில் சுணக்கமான சூழல் நிலவுகிறது. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. மேலும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக டாலரின் தேவை அதிகரித்து ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்ததால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவை சந்தித்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 495 புள்ளிகள் சரிந்து 38,645ஆகவும், நிப்டி 158 புள்ளிகள் சரிந்து 11,594ஆகவும் நிறைவடைந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|