பதிவு செய்த நாள்
26 ஏப்2019
05:03

புதுடில்லி: மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த, 2018 – 19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், 4.6 சதவீதம் குறைந்து, 1,796 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, 2017- – 18ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 1,882 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 7,500 கோடி ரூபாயாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டு ஈட்டியதை விட, 2.9 சதவீதம் குறைவு. அதேசமயம், இதே காலத்தில், நிகர விற்பனை, 6.3 சதவீதம் உயர்ந்து, 83 ஆயிரத்து 26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், நிறுவனத்தின் வாகன விற்பனை, 4.7 சதவீதம் உயர்ந்து, 18 லட்சத்து 62 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1 லட்சத்து 8 ஆயிரத்து 749 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
அன்னியச் செலாவணி மாற்றம், மூலப் பொருட்கள் விலை உயர்வு, விளம்பரச் செலவு அதிகரிப்பு போன்றவற்றால், நிகர லாபம் குறைந்துள்ளதாக, மாருதி சுசூகி இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|