பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை; ஆர்பிஐ ரூ.25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவுபணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை; ஆர்பிஐ ரூ.25,000 கோடி கடன் பத்திரம் ... ... மாருதி சுசூகி நிறுவனத்தின் நிகர லாபம் சரிவு மாருதி சுசூகி நிறுவனத்தின் நிகர லாபம் சரிவு ...
வங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2019
04:52

மும்பை: கடந்த, 2018 ஜூன் வரை­யி­லான ஓராண்டு காலத்­தில், வங்கி குறை­தீர்ப்பு மையங்­களில், 1.63 லட்­சம் புகார்­கள் குவிந்­துள்ளன. இது, முந்­தைய ஆண்டை விட, 24 சத­வீ­தம் அதி­கம். அவற்­றில், 96 சத­வீத புகார்­க­ளுக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளது என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.

புகார்­களில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா முத­லி­டத்­தில் உள்­ளது. இவ்­வங்கி மீது, 47ஆயி­ரம் புகார்­கள் குவிந்­தன. அடுத்து, எச்.டி.எப்.சி., வங்கி, 12 ஆயி­ரம் புகார்­க­ளு­டன் இரண்­டா­வது இடத்தை பிடித்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, சிட்டி பேங்க் மீது, 1,450 புகார்­கள் கூறப்­பட்­டுள்ளன.

வங்­கி­கள், விதி­க­ளின்­படி வெளிப்­ப­டை­யாக நடந்து கொள்­வ­தில்லை என, 22.1 சத­வீத புகார்­கள் வந்­துள்ளன. இதை­ய­டுத்து, ஏ.டி.எம்., மற்­றும் டெபிட் கார்டு தொடர்­பாக, 15.1 சத­வீ­தம்; கிரெ­டிட் கார்டு 7.7 சத­வீ­தம்; வலை­த­ளம் வாயி­லான வங்­கிச் சேவை குறித்து, 5.2 சத­வீத புகார்­கள் தெரி­விக்­கப்­பட்­டுள்ளன.

ஓய்­வூ­தி­யம், முன்­கூட்­டியே தெரி­விக்­கா­மல் சேவைக் கட்­ட­ணம் வசூ­லிப்­பது, கடன், டெபா­சிட், நேரடி விற்­ப­னை­யில் ஈடு­பட்­டுள்ள முக­வர்­கள், வாராக் கடன் மீட்பு நட­வ­டிக்­கை­கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தவ­றான தக­வல்­களை அளிப்­பது போன்­றவை தொடர்­பாக, தலா, 5 சத­வீத புகார்­கள் வந்­துள்ளன.

மத்­தி­யஸ்­தம் மூலம் தீர்வு காணப்­பட்ட புகார், 42.4 சத­வீ­தத்­தில் இருந்து, 65.8 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. வங்கி குறை­தீர்ப்­பா­யங்­கள், வாடிக்­கை­யா­ளர்­களின் புகார்­கள் மீது விரைந்து நட­வ­டிக்கை எடுக்­கிறது. இத­னால், வங்­கி­கள் மீதான புகார் பரி­சீ­லனை செல­வி­னங்­கள் குறைந்து வரு­கின்றன. ஒரு புகாரை பரி­சீ­லிக்க ஆகும் சரா­சரி செலவு, 3,626 ரூபா­யில் இருந்து, 3,504 ரூபா­யாக குறைந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஏப்ரல் 26,2019
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)