மீண்டும் பொதுத் துறை வங்கிகள் இணைப்பு; மத்திய அரசு பரிசீலனை மீண்டும் பொதுத் துறை வங்கிகள் இணைப்பு; மத்திய அரசு பரிசீலனை ...  ஜி.எஸ்.டி., வருவாயில் புதிய சாதனை:முதன் முறையாக ரூ.1.13 லட்சம் கோடியை தாண்டியது ஜி.எஸ்.டி., வருவாயில் புதிய சாதனை:முதன் முறையாக ரூ.1.13 லட்சம் கோடியை ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘மாருதி சுசூகி’ வாகன விற்பனை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2019
23:27

புதுடில்லி:கடந்த ஏப்ரலில், ‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனத்தின் பயணியர் வாகன விற்பனை, 19.6 சதவீதம் சரிவடைந்து, ஒரு லட்சத்து, 33 ஆயிரத்து, 704 ஆக குறைந்துள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், ஒரு லட்சத்து, 64 ஆயிரத்து, 978 ஆக இருந்தது.இந்த விற்பனையில், ‘டொயோட்டா’ நிறுவனத்திற்கு விற்கப்பட்ட, 364 ‘பலேனோ’ கார்களும் அடங்கும்.சாதாரண கார் பிரிவின் விற்பனை, 39.8 சதவீதம் குறைந்துள்ளது. இதில், ‘ஆல்டோ 800’ மற்றும் ‘வேகன் ஆர்’ விற்பனை, 37 ஆயிரத்து, 794 ஆக இருந்தது; 22 ஆயிரத்து, 766 ஆக சரிவடைந்துள்ளது.

‘காம்பேக்ட்’ கார் பிரிவின் விற்பனை, 13.9 சதவீதம் குறைந்து, 83 ஆயிரத்து, 834ல் இருந்து, 72 ஆயிரத்து, 146 ஆக குறைந்துள்ளது.இப்பிரிவில், புதிய தலைமுறை, ‘வேகன் ஆர், ஆல்டோ கே10, ஸ்விப்ட், இக்னிஸ், பலேனோ, செலிரியோ, டிசையர், டூர் எஸ்’ ஆகியவை அடங்கும்.நடுத்தர வாகனப் பிரிவில், ‘சியாஸ்’ கார் விற்பனை, 45.5 சதவீதம் குறைந்து, 5,116ல் இருந்து, 2,789 ஆக குறைந்துள்ளது.உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மேற்கொண்ட பயணியர் கார் விற்பனை, 17.2 சதவீதம் சரிவடைந்து, ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 245 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

அதேசமயம், பன்முக பயன்பாடு மற்றும் வர்த்தக வாகனப் பிரிவுகளின் விற்பனை அதிகரித்து உள்ளது.‘ஜிப்ஸி, எர்டிகா, எஸ் – கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா’ உள்ளிட்ட பன்முகப் பயன்பாடு வாகன விற்பனை, 5.9 சதவீதம் உயர்ந்து, 20 ஆயிரத்து, 804ல் இருந்து, 22 ஆயிரத்து, 35 ஆக ஏற்றம் கண்டுள்ளது.

எனினும், வேன் பிரிவின் விற்பனை, 26.7 சதவீதம் குறைந்து, 15 ஆயிரத்து, 886ல் இருந்து, 11 ஆயிரத்து, 649 ஆக சரிந்துள்ளது.இலகு ரக வர்த்தக வாகன விற்பனை, 50.2 சதவீதம் அதிகரித்து, 1,544ல் இருந்து 2,319 ஆக உயர்ந்துள்ளது.இதனிடையே, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் திறனில், மேம்படுத்தப்பட்ட, ‘எர்டிகா’ பன்முக பயன்பாட்டு வாகனத்தை, 9.86 – 11.20 லட்சம் ரூபாய் விலையில், மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)