பதிவு செய்த நாள்
10 மே2019
23:24

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம், கடந்த, 2018-–19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில், 838 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
முந்தைய, 2017-– 18ம் நிதியாண்டின், இதே காலாண்டில், இவ்வங்கி, 7,718 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.இதே காலத்தில், வங்கியின் நிகர வட்டி வருவாய், 14.9 சதவீதம் உயர்ந்து, 19 ஆயிரத்து, 974 கோடி ரூபாயில் இருந்து, 22 ஆயிரத்து, 954 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வங்கியின் செயல்பாட்டு லாபம், 6 சதவீதம் உயர்ந்து, 15 ஆயிரத்து, 883 கோடி ரூபாயில் இருந்து, 16 ஆயிரத்து, 933 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. மொத்த வாராக் கடன், 1.88 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 1.72 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.வாராக் கடனுக்கான ஒதுக்கீடு, 24 ஆயிரத்து, 80 கோடி ரூபாயில் இருந்து, 17 ஆயிரத்து, 336 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க, கடந்த நிதியாண்டில், இவ்வங்கி, 3,984 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|