‘ஆர்கானிக்’ விவசாயத்திற்கு சலுகை ‘ஆர்கானிக்’ விவசாயத்திற்கு சலுகை ... கட்டுமான திட்டங்களுக்கு 2 நாட்களில் ஆய்வறிக்கை கட்டுமான திட்டங்களுக்கு 2 நாட்களில் ஆய்வறிக்கை ...
10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு; கருத்து கணிப்பு முடிவுகளால் பங்கு சந்தையில் எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2019
06:37

மும்பை: தேர்­த­லுக்கு பிந்­தைய கருத்­துக் கணிப்­பில், பா.ஜ., தனிப் பெரும்­பான்­மை­யு­டன் மீண்­டும் ஆட்சி அமைக்­கும் என தெரிய வந்­ததை அடுத்து, நேற்று, இந்­திய பங்­குச் சந்­தை­கள், மிகப்பெரிய அள­விற்கு எழுச்சி கண்­டன.

அதிக அள­வில், பங்­கு­கள் கைமா­றி­ய­தால், மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, 1,421 புள்­ளி­கள் அதி­க­ரித்து, 39,352.67 புள்­ளி­களில் நிலை கொண்­டது. பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பின், முதன் முறை­யாக இந்த அள­விற்கு, புள்­ளி­கள் அதி­க­ரித்­துள்­ளன. இதன் கார­ண­மாக, மும்பை பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்ட நிறு­வ­னங்­களில், முத­லீட்­டா­ளர்­கள் வசம் உள்ள பங்­கு­க­ளின் சந்தை மதிப்பு, ஒரே நாளில், 5.33 லட்­சம் கோடி ரூபாய் அதி­க­ரித்­துள்­ளது.

தொடர்ந்து மூன்று வர்த்­தக தினங்­க­ளாக, மும்பை பங்­குச் சந்­தை­யின் சென்­செக்ஸ் குறி­யீடு உயர்ந்­துள்­ளது. இதன் கார­ண­மாக, முத­லீட்­டா­ளர்­கள் பல்­வேறு நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­களில் மேற்­கொண்ட முத­லீட்டு மதிப்பு, மூன்று நாட்­களில், 7.48 லட்­சம் கோடி ரூபாய் அதி­க­ரித்­துள்­ளது. நேற்று, தேசிய பங்­குச் சந்­தை­யின், ‘நிப்டி’ குறி­யீடு, 421.10 புள்­ளி­கள் உயர்ந்து, முதன் முறை­யாக, 11,828.25 புள்­ளி­களை எட்­டி­யது.

நம்பிக்கை:
நேற்று, இந்­திய பங்­குச் சந்­தை­களில், பஜாஜ் ஆட்டோ, இன்­போ­சிஸ் தவிர்த்து, அனைத்து நிறு­வ­னப் பங்­கு­களும், அதிக அள­வில், விலை உயர்­வு­டன் கைமா­றின. இது குறித்து, கோடக் இன்ஸ்­டி­டி­யூ­ஷ­னல் ஈக்­யுட்­டிஸ் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: நடந்து முடிந்த, 17வது லோக்­சபா தேர்­த­லில், பா.ஜ., தலை­மை­யி­லான, தேசிய ஜன­நா­யக கூட்­டணி, மீண்­டும் ஆட்சி அமைக்­கும் என, கருத்­துக் கணிப்­பு­கள் தெரி­வித்­து உள்­ளன.

அத­னால், மத்­திய அர­சின் கொள்­கை­களும், திட்­டச் செயல்­பா­டு­களும் மாற்­ற­மின்றி தொட­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. முக்­கி­ய­மாக, மத்­தி­யில் நிலை­யான ஆட்சி அமை­யும் என்ற நம்­பிக்கை, இந்­திய பங்­குச் சந்­தை­க­ளின் எழுச்­சிக்கு வித்­திட்­டுள்­ளது. முத­லீட்­டா­ளர்­கள், அதிக அள­வில் பங்­கு­களில் முத­லீடு செய்து வரு­கின்­ற­னர். தேர்­தல் முடி­வு­கள், 23ம் தேதி வெளி­யாக உள்­ளன. அது­வரை, பங்­குச் சந்­தை­களில் மித­மான ஏற்­றம் காணப்­படும். கருத்­துக் கணிப்பை ஒட்­டியே, தேர்­தல் முடி­வு­களும் அமைந்து விட்­டால், பங்­குச் சந்­தை­கள் மேலும் எழுச்சி காணும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

ரூபாய் மதிப்பு கிடு கிடு:
* நேற்று, டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, 58 காசு­கள் அதி­க­ரித்து, 70.23ல் இருந்து, 69.65 ஆக உயர்ந்­துள்­ளது.
* வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளின் நிதி நெருக்­க­டிக்கு, ரிசர்வ் வங்கி தீர்வு திட்­டத்தை அறி­விக்க உள்­ள­தாக தக­வல் வெளி­யா­ன­தால், அந்­நி­று­வன பங்­கு­கள் விலை உயர்ந்­தது.
* இந்­தியா புல்ஸ் ஹவு­சிங் பைனான்ஸ், டி.எச்.எப்.எல்., நிறு­வன பங்­கு­கள், 10 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான விலை உயர்­வைக் கண்­டன.
* வீட்டு வசதி கடன் வழங்­கும், கிருஹ் பைனான்ஸ், எல்.ஐ.சி., ஹவு­சிங் பைனான்ஸ், ரெப்கோ ஹோம், ரிலை­யன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறு­வன பங்­கு­கள் விலை­யும் குறிப்­பி­டத்­தக்க வகை­யில் அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்
business news
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்
business news
கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)