பதிவு செய்த நாள்
22 மே2019
07:03
தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், கட்டுமான திட்டங்களுக்கு விண்ணப்பம் வந்ததில் இருந்து, 48 மணி நேரத்துக்குள் ஆய்வறிக்கையை, சம்பந்தப்பட்ட துறையினர் அளிப்பதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுமான திட்டங்கள் அனுமதி நடைமுறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை முடிவு செய்வதற்கான குழு கூட்டம், சென்னையில், சமீபத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விபரம்: கட்டுமான திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்கள் மீது, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகள் எடுக்கும் நடவடிக்கைகள், ‘ஆன்லைன்’ முறையிலேயே விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், பாதிப்பு குறைவான திட்டங்களுக்கான கட்டுமான அனுமதி வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்படும்.
இது தொடர்பாக, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, புதிய கொள்கை முடிவை விரைவில் அறிவிக்க உள்ளது. கட்டுமான திட்ட அனுமதிக்கு தேவையான கள ஆய்வு அறிக்கைகள் விண்ணப்பம் பெறப்பட்டதில் இருந்து, 48 மணி நேரத்துக்குள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவை உள்ளிட்ட பல்வேறு முடிவுகள், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|