பதிவு செய்த நாள்
22 மே2019
07:05

புதுடில்லி: மத்திய அரசு மேற்கொண்ட, 656 கோடி ரூபாய் மூலதனத்திற்கு, பங்குகள் வழங்குமாறு, இந்திய விமான நிலையங்கள் ஆணையமான, ஏ.ஏ.ஐ., க்கு, மத்திய நிதியமைச்சம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின், 100 சதவீத பங்கு மூலதனத்துடன், 1995, ஏப்.,1ல், பொதுத் துறை நிறுவனமான, ஏ.ஏ.ஐ., உருவாக்கப்பட்டது. இதனுடன், ஏற்கெனவே செயல்பட்டு வந்த தேசிய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவை இணைக்கப்பட்டன. அப்போது, மத்திய அரசு மேற்கொண்ட, 656 கோடி ரூபாய் மூலதனத்திற்கு நிகராக, பங்குகளை வழங்குமாறு, ஏ.ஏ.ஐ.,க்கு, மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பங்கு ஒதுக்கீடு முடிந்தபின், நிறுவனச் சட்டத்தின் கீழ், ஏ.ஏ.ஐ., கொண்டு வரப்படும். இதையடுத்து, பங்குகளை திரும்பப் பெறுவது அல்லது பங்குச் சந்தை பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், மூலதனத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் என, தெரிகிறது. பல ஆண்டுகளாக, ஏ.ஏ.ஐ., அதன் லாபத்தில், 30 சதவீதத்தை மட்டும், மத்திய அரசுக்கு ‘டிவிடெண்ட்’ ஆக வழங்கி வந்தது.
இந்நிலையில், மூலதன மறுசீரமைப்பு கொள்கைப்படி, பொதுத் துறை நிறுவனங்கள், அதிகபட்ச டிவிடெண்டை, மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தியது. அதன்படி, 2017 -– 18ம் நிதியாண்டில், ஈட்டிய, 2,800 கோடி ரூபாய் லாபம் முழுவதையும், ஏ.ஏ.ஐ., மத்திய அரசுக்கு வழங்கி விட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்திய விமான நிலையங்கள் ஆணையம், 125 விமான நிலையங்களின் பராமரிப்பு, மேம்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|