பதிவு செய்த நாள்
22 மே2019
07:08

பல்லடம்: ‘ஜி.எஸ்.டி., குறைக்கப்படலாம்’ என்ற எதிர்பார்ப்பில், பல்லடம் பகுதியில் விசைத்தறி ஜவுளிகள் விற்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.
-திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் மூலம், தினமும் 1 கோடி மீட்டர் துணிகள் உற்பத்தி ஆகின்றன. அவை, வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மதிப்பு கூட்டுப்பொருளாக மாற்றப்படுகின்றன. விசைத்தறி ஜவுளிகளுக்கு 12 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. அதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரி வருகின்றனர்.
இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: ஜி.எஸ்.டி.,யை 12 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை வைத்துள்ளோம். தேர்தல் முடிந்தவுடன், ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பில், ஏற்கனவே நெசவு செய்யப்பட்ட துணிகள், கடந்த ஒரு மாதமாக, வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படாமல் தேங்கி கிடக்கின்றன. ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டால், குறைக்கப்பட்ட வரிவிதிப்பின்படி துணிகளை விற்றுவிடலாம் என்ற நோக்கத்தில், இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|