பதிவு செய்த நாள்
21 ஜூன்2019
06:11

புதுடில்லி: நிதியமைச்சராக, நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பின், முதன்முதலாக, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், இன்று(ஜூன் 21) கலந்து கொள்கிறார்.
இன்று நடைபெற இருக்கும் இக்கூட்டத்தில், தேசிய மிகை லாப தடுப்பு ஆணையத்தின் கால நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. இன்னும் ஓராண்டு காலத்துக்கு நீட்டிப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜி.எஸ்.டி., குறைப்புக்கு பின், அதன் லாபத்தை நுகர்வோருக்கு வழங்காமல் இருப்பது குறித்த புகார்களை கையாள, இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
மேலும், இந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ பெறுவதை எளிதாக்குவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.மேலும், ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை உபயோகத்துக்கான, ‘பாஸ்டேக்’ உடன், ‘இ – -வே’ பில்லை ஒருங்கிணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|