பதிவு செய்த நாள்
21 ஜூன்2019
06:14

சென்னை: ஜவுளி மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு உட்பட, பல்வேறு துறைகளில், 3,500 கோடி ரூபாய் வரையிலான புதிய முதலீடுகளை தமிழகம் பெற்றுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை பெறுவதில், தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 3 லட்சத்து, 431 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது. இந்நிலையில், ஜவுளி உட்பட பல்வேறு துறைகளில், முதலீடுகள் வருகின்றன.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை அருகே, இலவச வர்த்தக கிடங்கு மண்டலத்தில், பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. அமெரிக்காவின் வரி உயர்வை முன்னிட்டு, சீனாவைச் சேர்ந்த பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இதில், உற்பத்தி நிறுவனங்களின் தொகுப்பாக தமிழகம் இருப்பதால், இங்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இலவச வர்த்தக கிடங்கு மண்டலத்தில், ‘கோக்’ நிறுவனம், 1,500 கோடி ரூபாயும்; ‘டி.பி., வேல்ர்டு’ 1,000 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளன.
எம்.எம்., நிறுவனம், வாகன உதிரிபாகங்கள் தயாரிக்க, தகுந்த இடத்தை ஆய்வு செய்து வருகிறது. மேலும், ‘ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம்’ 250 கோடி ரூபாய் வரை, துாத்துக்குடியில் காற்றாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.மேலும், ‘பி.கே.பி.என்., குரூப்ஸ்’ மற்றும் ‘அம்பிகா காட்டன் மில்ஸ்’ நிறுவனங்கள், நாமக்கல் மற்றும் திண்டுக்கலில், 550 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|