பதிவு செய்த நாள்
21 ஜூன்2019
11:51

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.1000 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.26,000ஐ கடந்துள்ளது.
தங்கம் விலை நேற்று (ஜூன் 20) சவரனுக்கு ரூ.528 உயர்ந்திருந்த நிலையில், இன்று (ஜூன் 21) சவரனுக்கு ரூ.464 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.58 உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22 காரட்) விலை ரூ.3271ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.26,168க்கும் விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் (24 காரட்) விலை ரூ.34,270 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலையும் 20 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.50 ஆக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், அமெரிக்காவில் உள்ள வங்கிகளின் கூட்டமைப்பாக, 'பெடரல்' வங்கி உள்ளது. இது, தற்போது, வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்த போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
அதனால், சர்வதேச முதலீட்டாளர்கள், அந்நாட்டு வங்கிகளின் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யாமல், தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். சீனா, அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தக போரால், உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாலும், ஏற்கனவே பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.
31 கிராம் உடைய ஒரு 'அவுன்ஸ்' தங்கம் விலை 20ம் தேதி, 3,000 ரூபாய் உயர்ந்து உள்ளது. இதுபோன்ற காரணங்களால், உள்நாட்டில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது; விலை உயர்வு தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|