இந்தியாவின் வரி அதிகரிப்பை ஏற்க முடியாது: டிரம்ப் இந்தியாவின் வரி அதிகரிப்பை ஏற்க முடியாது: டிரம்ப் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘டெபிட் கார்டு’ பயன்பாட்டில் சலுகைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2019
07:21

‘டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு’ அடிப்படையில் வேறுபட்டவைஎன்றாலும், கிரெடிட் கார்டு அளிக்கும் பல பலன்களை டெபிட்கார்டுகளும் அளிக்கின்றன. டெபிட் கார்டை பணம் எடுப்பதற்கானகருவியாக மட்டும் கருத வேண்டியதில்லை. டெபிட் கார்டுபயன்பாட்டில் பலரும் அறிந்திராத பலன்கள் உள்ளன :வார்டு புள்ளிகள்: ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுக்கவும், பில் தொகை செலுத்தவும் டெபிட் கார்டு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், இவை தவிரவும் டெபிட் கார்டு தரும் பலன்கள் பல இருக்கின்றன. கிரெடிட் கார்டு போலவே, ரிவார்டு புள்ளிகள், வவுச்சர்கள், விமான நிலைய சலுகை, விபத்து காப்பீடு போன்றவற்றை அளிக்கின்றன.
கடன் மட்டும் இல்லை: கிரெடிட் கார்டுடன் ஒப்பிடும் போது, டெபிட் கார்டுகளில் இல்லாத பலன், கடனில் வாங்கும் வசதி மற்றும் வட்டி இல்லா காலமாகும். ஆனால், ஒரு சில டெபிட் கார்டுகள், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பொருட்களை வாங்கும் போது, மாதத்தவணையாக மாற்றிக்கொள்ள வழி செய்கின்றன.பிரிமியம் கார்டுகள்: பொதுவாக டெபிட் கார்டுகள் அளிக்கும் பலன்கள், வழக்கமான கார்டுகளைவிட, பிரிமியம் வகை கார்டுகளில் அதிகம் உள்ளன. பிரிமியம் கார்டுகள், அதிக பேலன்ஸ் உள்ள கணக்குகளுக்கு வழங்கப்படுபவை. இவற்றின் குறைந்த பட்ச தொகை பராமரிப்புக்கு ஏற்ப, வங்கிகள் டெபிட் கார்டு கட்டணத்திலும் சலுகை அளிக்கலாம்.கேஷ்பேக் சலுகைகள்: ஒரு சில டெபிட் கார்டுகள் இப்போது கேஷ்பேக் சலுகைகளும் அளிக்கின்றன. விமான நிலையங்களில் சலுகையும் அளிக்கின்றன.

மேலும், டெபிட் கார்டுகள், மொபைல் மூலம் கான்டாக்ட்லெஸ் வழியே பணம் செலுத்தும் வசதியை அளிக்கின்றன். இந்த வசதி அதிகம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.தேர்வு எப்படி? எனினும், டெபிட் கார்டை விட கிரெடிட் கார்டு அளிக்கும் ரிவார்டு சலுகைகள் அளவு, அதிகமாக இருக்கலாம். அதே போல, ரிவார்டு புள்ளிகள் காலாவதியாகும் காலம் உண்டு என்பதால், அதற்கேற்ப செயல்பட வேண்டும். இவற்றை சரியாக கவனித்து உரிய நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)