பதிவு செய்த நாள்
08 ஜூலை2019
00:04

சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்ள, வீட்டுக்கடன் கைகொடுக்கிறது. எனினும், வீட்டுக்கடனுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மிகவும் ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும். எனவே, பொதுவாக வீட்டுக்கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களை தெரிந்து, அதற்கேற்ப திட்டமிடுவது நல்லது.
கிரெடிட் ஸ்கோர்: வங்கிகள், கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, ‘கிரெடிட் ஸ்கோர்’ எனும், கடன் தகுதி மதிப்பெண்ணை, முக்கியமாக கருதுகின்றன. கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், வங்கிகள், கடன் வழங்க மறுக்கலாம் அல்லது தயங்கலாம். கிரெடிட் ஸ்கோரில், விபரங்கள் தவறாக இருந்தாலும், பாதிப்பை ஏற்படுத்தும். இதை கவனித்து, சரி செய்ய வேண்டும்.
கடன் தகுதி: ஒவ்வொரு வங்கியும், கடன் வழங்குவதற்கான வயது வரம்பை கொண்டிருக்கலாம். பொதுவாக, வங்கிகள், இளம் வயதினர் மற்றும் பணி புரியும் வயதினருக்கு, எளிதாக கடன் வழங்குகின்றன. ஓய்வு பெறும் காலத்தை நெருங்கும் வயதினர் என்றால், கடனை திரும்ப செலுத்த போதிய காலம் இல்லை என கருதி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
கடன் சுமை: ஏற்கனவே, கடன் சுமை உடையவர்களுக்கு, வங்கிகள் கடன் வழங்க தயங்கலாம். அதிக கடன் கொண்ட, பல்வேறு கடன்களை பெற்றிருப்பவர் விண்ணப்பம், நிராகரிக்கப்படலாம். எனவே, கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றை, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கடன் சுமையை, குறைத்துக்கொள்வதும் அவசியம். முறையாக, தவணையை செலுத்தி வர வேண்டும்.
வேலை அம்சங்கள்: ஒருவர், பணிபுரியும் நிறுவனம் சார்ந்த அம்சங்களும், கடன் அனுமதியை தீர்மானிக்கலாம். நிறுவனத்தின் நம்பகத்தன்மை, வேலையின் தன்மை ஆகிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும். அதே போல, அடிக்கடி வேலை மாறுவதும், பாதகமான அம்சமாக கருதப்படும். கடனுக்கான, குறைந்த பட்ச வருமான தகுதியும், முக்கிய அம்சமாக அமைகிறது.
ஆவணங்கள்: வீட்டுக்கடன், ஆவணங்கள் அடிப்படையில் அளிக்கப்படுகிறது. எனவே, தேவையான ஆவணங்களை சமர்பிப்பதில் ஏதேனும் தவறு செய்தால் அல்லது அளிக்கப்படும் சான்றிதழ்களில் குறை இருந்தால், அது பாதிப்பை ஏற்படுத்தும். வாங்க இருக்கும் சொத்து, வில்லங்கம் இல்லாமல் இருப்பதையும், உறுதி செய்து கொள்வது அவசியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|