வால்மார்ட் நிறுவன தலைவர் வருகைவால்மார்ட் நிறுவன தலைவர் வருகை ...  எம்.எஸ்.எம்.இ., முதலீடு ரூ.2.23 லட்சம் கோடி எம்.எஸ்.எம்.இ., முதலீடு ரூ.2.23 லட்சம் கோடி ...
‘இன்போசிஸ்’ நிகர லாபம் 5.2 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2019
23:21

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிகர லாபம், 5.2 சதவீதம் அதிகரித்து உள்ளது.




தகவல் தொழில்நுட்ப துறையில், நாட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும், மிகப் பெரிய நிறுவனமான, இன்போசிஸ், நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 3,802 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.கடந்த நிதியாண்டின், முதல் காலாண்டில், இதுவே, 3,612 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது தற்போது, 5.2 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது.




இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:நிறுவனத்தின் வருவாய், 13.9 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 21 ஆயிரத்து, 803 கோடி ரூபாய் வருவாயை, நிறுவனம் ஈட்டியுள்ளது.இதுவே, கடந்த நிதியாண்டில், 19 ஆயிரத்து, 128 கோடி ரூபாயாக இருந்தது.





கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில், நடப்பு நிதியாண்டின் வருவாய் வளர்ச்சி, 7.5 –- 9.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தோம்.தற்போது, நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் வளர்ச்சி வழிகாட்டல், 8.5 –- 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.




தரவுகள் தயாரிக்கும் நிறுவனமான, அமெரிக்காவைச் சேர்ந்த, டிரைபேக்டா நிறுவனத்தில், மேலும் கூடுதலாக, 41 கோடி ரூபாய் முதலீட்டை மேற்கொள்ள நிர்வாக குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.மும்பை பங்குச் சந்தையில், நேற்று இன்போசிஸ் நிறுவன பங்கு விலை, 727.10 ரூபாயாக இருந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 730.85 ரூபாயாக இருந்தது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)