பதிவு செய்த நாள்
16 ஜூலை2019
03:05

நாமக்கல், ஜூலை 16–ஆடி துவக்கம், வெப்பம் காரணமாக, முட்டை நுகர்வு, 15 சதவீதம் சரிந்துள்ளது. இதையடுத்து, முட்டை கொள்முதல் விலை, ஐந்து நாட்களில், 60 காசுகள் குறைந்துள்ளது. இது, பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:ஆடி மாதம் துவங்க உள்ளதாலும், மழையின்றி கடும் வெப்பம் ஏற்பட்டிருப்பதன் காரணமாகவும், நுகர்வு, 15 சதவீதம் சரிந்துள்ளது. தீவனங்களுக்கான மூலப்பொருள், தண்ணீர் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கோழிப்பண்ணைகள் மூடும் அபாயம் உள்ளது.எனவே, வங்கிகள், ஓர் ஆண்டு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக அரசு, தீவன மூலப்பொருட்ளை இருப்பு வைப்பதற்கான கடனை, இரண்டு மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|