பதிவு செய்த நாள்
17 ஜூலை2019
04:16

புதுடில்லி: நேற்று, மும்பை பங்குச் சந்தை குறியீடான, சென்செக்ஸ், 234 புள்ளிகள் அதிகரித்து, 39,131.04 புள்ளிகளாக உயர்வு பெற்றது.
‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க், எல் அண்டு டி இன்போசிஸ்’ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை, தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்ததன் காரணமாக, சந்தை இந்த உயர்வை சந்தித்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான, நிப்டியும், 74.25 புள்ளிகள் அதிகரித்து, 11,662.60 புள்ளிகளில் முடிவுற்றது. மேலும், வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 11,670.05 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக, 11,573.95 புள்ளிகளையும் தொட்டது.
யெஸ் பேங்க் நிறுவன பங்குகள் விலை, நேற்று, 14 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, என்.டி.பி.சி., பவர்கிரிட், டாடா ஸ்டீல் ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்டவையும் உயர்வை சந்தித்தன. ‘டி.சி.எஸ்., எச்.சி.எல்., டெக், கோட்டக் பேங்க், டெக் மகிந்திரா பார்தி ஏர்டெல்’ ஆகியவை சரிவை சந்தித்தன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|