பதிவு செய்த நாள்
17 ஜூலை2019
04:14

புதுடில்லி: எஸ்.பி.ஐ., எனும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு, 7 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது, இந்திய ரிசர்வ் வங்கி. அண்மைக் காலத்தில் எந்த ஒரு வங்கிக்கும், இந்த அளவு அபராதம் விதிக்கப்பட்டதில்லை.
எஸ்.பி.ஐ., ஒழுங்குமுறை விதிகளை சரிவர பின்பற்றாத காரணத்தால், இந்த அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2017ம் ஆண்டு, மார்ச், 31ம் தேதியன்று, எஸ்.பி.ஐ., நிதி நிலையை மதிப்பிடுவதற்கு, ரிசர்வ் வங்கி, சட்ட ரீதியான ஆய்வை மேற்கொண்டது.இந்த ஆய்வில், பல்வேறு தகவல்களை பகிர்வது தொடர்பான விதிமுறைகள் பின்பற்றாமல் இருந்தது தெரிய வந்தது.
குறிப்பாக, நடப்பு கணக்குகள், மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படாமல் இருந்தது தெரிய வந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எஸ்.பி.ஐ., பதில்களில் திருப்தியடையாத ரிசர்வ் வங்கி, குற்றச்சாட்டுகள் நிரூபணமானதாக அறிவித்து, தற்போது, 7 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|