டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் சரிந்ததுடாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் சரிந்தது ...  தொழில் துறை உற்பத்தி 2 சதவீதமாக சரிவு தொழில் துறை உற்பத்தி 2 சதவீதமாக சரிவு ...
ஒரு லட்சம் கோடி ரூபாய் தாருங்கள் நிதி அமைச்சரிடம் தொழில் துறையினர் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2019
00:20

புது­டில்லி:இந்­திய தொழில் துறை­யில், முத­லீட்டு சுழற்­சியை ஏற்­ப­டுத்­த­வும், வளர்ச்­சியை உரு­வாக்­க­வும், 1 லட்­சம் கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்­கு­மாறு, மத்­திய அர­சி­டம் தொழில் துறை­யி­னர் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.


நிதி­ய­மைச்­சர்நிர்­மலா சீதா­ரா­மன், தொழில் துறை வளர்ச்சி குறித்து, இத்துறை­யைச் சேர்ந்த தலை­வர்­க­ளைச் சந்தித்து, நேற்று பேச்சு நடத்­தி­னார்.மூன்று மணி­நே­ரம் நடை­பெற்ற இந்த சந்­திப்­பின்­போது, தொழில் துறை­யில், முத­லீட்டு சுழற்­சியை ஏற்­ப­டுத்­த­வும், வளர்ச்­சியை அதி­க­ரிக்­க­வும், 1 லட்­சம்கோடி ரூபாய் ஊக்கத் தொகையை, அரசு வழங்க வேண்­டும் என, தொழில் துறை­யி­னர் கேட்­டுக்­கொண்­ட­னர்.இதை­ய­டுத்து, பொரு­ளா­தார வளர்ச்­சியைஅதி­க­ரிப்­ப­தற்­கான நட­வடிக்­கை­களை, விரை­வில் எடுப்­ப­தாக, அர­சாங்­கம் உறுதி அளித்­துள்­ளது என, சந்­திப்­புக்­குப் பின், தொழில் துறை தலை­வர்­கள் தெரி­வித்­த­னர்.இது குறித்து அவர்­கள் மேலும் கூறி­ய­தா­வது:பி.கே.கோயங்கா, தலைவர், அசோ­செம்:தற்­போது ஏற்­பட்­டுள்ள மந்த நிலைக்கு, விரை­வான தீர்­வு­களை எடுக்க வேண்­டியது அவ­சி­யம். அத­னால், 1 லட்சம் கோடி ரூபாய் ஊக்­கத் தொகையை வழங்­க­லாம் என, நாங்­கள் பரிந்­துரைத்­துள்­ளோம்.சஜ்­ஜன் சிங்­கால், ஜெ.எஸ்,டபிள்யு குழு­மம்:இந்த சந்­திப்­பில், தொழில் துறை­யின் மந்த நிலையை மீட்­டெ­டுக்க, தேவை­யான நட­வ­டிக்­கை­களை விரை­வில் எடுப்­பது குறித்து பேசப்­பட்­டது.உருக்கு, வாக­னம், வங்கி சார நிதி நிறு­வ­னங்­கள் ஆகிய துறை­க­ளின் நிலை குறித்­தும் தெரி­வித்­தோம்.இதற்கு சாத­க­மான பதில்­களை நிதி­ய­மைச்­சர் தெரி­வித்­தார்.மேலும், பிரச்­னை­களுக்கு மிக விரை­வில் தீர்வு காணப்­படும் என்றும் கூறினார்.அஜய் பிர­மால், தலை­வர், பிர­மால் எண்­டர்­பி­ரை­சஸ்:தொழில்­கள் பல்­வேறு சிக்­கல்­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. தொழி­லுக்கு கடன் கொடுக்க வங்­கி­கள் தயங்­கு­வது உள்­ளிட்ட பல பிரச்­னை­கள் முன்­வைக்­கப்­பட்­டன.வங்­கி­களில் பணப்­புழக்கம் இல்லை என்­ப­தல்ல; கடன் வழங்­கப்­படு­வது இல்லை என்­பது குறித்தே சொன்­னோம். வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளால், பொரு­ளா­தா­ரத்­தில் ஏற்­பட்­டி­ருக்­கும் நிலை குறித்­தும் எடுத்­துச் சொன்­னோம்.வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளால், வாக­னக் கடன், வீட்­டுக் கடன், குறு,சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் ஆகிய பிரி­வு­களில் பாதிப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன. எனவே, விரை­வாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என சொன்­னேன். அத­னால், பொறுத்­தி­ருந்து பார்க்­க­லாம்.மேலும், நிறு­வன சட்டத்­தின் கீழ், சி.எஸ்.ஆர்., எனும் சமூக பொறுப்­பு­ணர்வு குறித்த விஷ­யங்­களில், சிறைத் தண்­டனை கூடாது என­வும் கோரப்­பட்­டது.டி.வி., நரேந்­தி­ரன், துணைத் தலை­வர், சி.ஐ.ஐ.,:சந்­திப்­பில், முக்­கி­ய­மான பிரச்­னை­கள் குறித்து நாங்­கள் விவா­தித்­தோம். வாகன துறை­யில் ஏற்­படும் மந்­த­நிலை உருக்கு துறை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­பது உள்­ளிட்ட பிரச்­னை­கள் பேசப்­பட்டன.சந்­தீப் சோமானி, தலைவர், பிக்கி:
ரிசர்வ் வங்கி, வட்டி விகி­தத்தை குறைத்­துள்­ளது என்­றா­லும், அதன் பலனை, வங்­கிகள், நுகர்­வோ­ருக்கு வழங்­கு­மாறு செய்­ய­வேண்­டும். ரிசர்வ் வங்கி, வட்டி விகி­தத்தை குறைத்­திருப்பது ஊக்­கம் அளிக்­கிறது.இவ்­வாறு, அவர்கள் தெரி­வித்­த­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)