குறைந்தது மொத்த விலை பணவீக்கம்  இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலையில் சரிவுகுறைந்தது மொத்த விலை பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ... ...  3,000 நிறுவனங்கள் 6 மாதங்களில் துவக்கம் 3,000 நிறுவனங்கள் 6 மாதங்களில் துவக்கம் ...
ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதில் சுணக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2019
23:51

ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் படிவமான, ‘படிவம் – 9’ நாட்டில் இதுவரை, 20 சதவீதம் அளவுக்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஜி.எஸ்.டி.,யைப் பொறுத்தவரை, மூன்று மாதம்; ஆறு மாதம் என, போன்ற காலகட்டங்களில் கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இருப்பினும், ஆண்டு முழுவதுக்குமான தாக்கலுக்கு, படிவம் – 9 என ஒன்று உள்ளது.இதை, அனைத்து வணிக நிறுவனங்களும் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான அவகாசம், வரும், 31ம் தேதியுடன் முடிகிறது. இருப்பினும் இதுவரை, இந்தியா முழுவதிலும், 20 சதவீதம் அளவுக்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் அல்லது வணிகர்கள், படிவம் – 9ஐ தாக்கல் செய்ய வேண்டும்.விற்றுமுதல், 2 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பின், ‘படிவம் – 9ஏ’ மற்றும் ‘9சி’ பயன்படுத்த வேண்டும்.கடந்த, 2017 – 18ம் நிதியாண்டுக்கான படிவத்தை தாக்கல் செய்ய, பலமுறை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தற்போது, 31ம் தேதியுடன், இந்த அவகாசம் நிறைவடைகிறது.ஆனால், இந்தியா முழுவதும் இதுவரை, 20 சதவீத நிறுவனங்களே, படிவம் – 9ஐ தாக்கல் செய்துள்ளன.இந்த படிவம் தாக்கல் செய்த பின், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருந்தால், அவர்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி, விளக்கம் கோர முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : அனில் அம்பானிக்கு சொந்தமான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் ஓர் அங்கமான, ஜி.சி.எக்ஸ்., எனும், ... மேலும்
business news
பிரயாக்ராஜ்: அடுத்த 6 ஆண்டுகளில் தங்களது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி டிரில்லியன் டாலராக கொண்டு வருவதே ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின், மொத்தவிலை பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாறுதலும் இன்றி, 1.08 சதவீதமாகவே இருப்பதாக, ... மேலும்
business news
சென்னை: கடந்த ஒரு வார காலமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று(செப்.,16) சவரன் ரூ.336 உயர்ந்துள்ளது.சென்னை, தங்கம் - ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
pradeep - Chennai,India
16-ஆக-201914:50:08 IST Report Abuse
pradeep வணக்கத்திற்குரிய தினமலர் செய்தி பிரிவு ஆசிரியர் அவர்களுக்கு, என் பணிவான வணக்கங்கள். நான் தங்கள் தினமலர் சென்னை நாளிதழில் (வியாழன்-15 அன்று பொருள் மற்றும் சேவை வரி ஆண்டு கணக்கு (2017 -18 கணக்கு தாக்கல் செய்வதில் வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள மிக கடினமான சூழ்நிலையை தாங்கள் மேற்கோள்கட்டியுள்ளீர்கள். இதற்க்கு எங்கள் வணிகர்கள் சங்கம், தணிக்கை அலுவலளர்கள் சங்கம் மற்றும் பிற மறைமுக வரி ஆலோசகர்கள் சங்கம் சார்பாக மிக நன்றி. எங்களின் பல்வேறு கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மாண்புமிகு தினமலர் நாளிதழ் ஆசிரியர் அவர்கள் மத்திய நிதி அமைச்சகம் மற்றும், மத்திய மறைமுக பொருள் மற்றும் சேவை ஆணையத்தின் உறுப்பினர்களிடம் எங்களின் இந்த கடினமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேலும் எங்களுக்கு இந்த 2017 -18 ஆண்டு GST கணக்கு தாக்கல் செய்வதற்கு மேலும் 2 மாத காலம் நீட்டிப்பு வழங்க ஆவண செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம். அதாவது தற்போதுள்ள அகத்து 31 2019 என்னும் காலக்கெடுவினை அக் 31 2019 வரை நீட்டிக்க கோரிக்கை வைக்கின்றோம். தங்கள் உண்மையுள்ள, கே. பிரதீப் நாராயணன் சென்னை-600 117 . கைபேசி : 95661 73748
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)