பங்கு வெளியீட்டுக்கு வரும் ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வரும் ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் ... சரிந்த ரூபாயின் மதிப்பு, பங்குச்சந்தைகள் உயர்ந்தன சரிந்த ரூபாயின் மதிப்பு, பங்குச்சந்தைகள் உயர்ந்தன ...
அசாதாரண நடவடிக்கை எடுங்கள்; அரசுக்கு, ‘நிடி ஆயோக்’ துணைத் தலைவர் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
23:35

புதுடில்லி : ‘‘தனியார் துறையினரின் மனதில் ஏற்பட்டிருக்கும் அச்ச உணர்வை நீக்கி, முதலீடுகளை அதிகரிக்க தேவையான ஊக்க நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்,’’ என, ‘நிடிஆயோக்’ துணைத் தலைவர், ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க, அசாதாரணமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.நேற்று, நிகழ்ச்சி ஒன்றில்பங்கேற்று பேசிய, ராஜீவ் குமார் மேலும் கூறியதாவது:நிதித் துறையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அழுத்தமானது, இதற்கு முன்பு எப்போதும் ஏற்பட்டதில்லை. இது போன்ற சூழ்நிலையை, கடந்த, 70 ஆண்டுகளில் வேறு யாரும் சந்தித்ததில்லை. ஒட்டுமொத்த நிதி அமைப்புகளும் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றன.

யாரும், யாரையும் நம்புவதாக இல்லை. தனியார் துறைக்குள், யாரும், யாரை நம்பியும் கடன் கொடுக்க தயாராக இல்லை. ஆனால் அதேசமயம், எல்லாரும் அதிக பணத்தை கைவசம் வைத்திருக்கின்றனர்.எனவே, அசாதாரணமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியதிருக்கும். தனியார் முதலீடுகள் மூலம், இந்த சிக்கலில் இருந்து இந்தியா வெளியேற முடியும்.நிதித் துறையில் ஏற்பட்டிருக்கும் அழுத்தம் குறித்து, ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2018- – 19ம் நிதியாண்டில், ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், பொருளாதார வளர்ச்சி, 6.8 சதவீதமாக சரிந்த நிலையில், அதை சரி செய்வதற்காக, பட்ஜெட்டில் ஏற்கனவே பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நிதித் துறையில் ஏற்பட்ட அழுத்தமானது, பொருளாதார மந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

கடந்த, 2009 – -14ம் ஆண்டில் கண்மூடித்தனமாக வழங்கப்பட்ட கடன்கள், 2014ம் ஆண்டுக்குப் பிறகு, வாராக் கடன்களாக மாறின. அதிகரித்துவிட்ட வாராக்கடன், அதன்பின் வங்கிகளை கடன் வழங்க முடியாமல் செய்துவிட்டது. வங்கிகளால் கடன் கொடுக்க முடியாத நிலையில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டன. இதனால், கடன் வளர்ச்சி, 25 சதவீதம் உயர்ந்தது.இருப்பினும், இந்த வங்கி சாரா நிதி நிறுவனங்களால், பெரிய அளவிலான கடன்களை நிர்வகிக்க முடியவில்லை; அதற்கான திறன் அவற்றிடம் இல்லை. இது, சில பெரிய நிறுவனங்கள், கடன்களை திருப்பி செலுத்தாமல் போவதற்கு வழிவகுத்தது. இந்நிலை, இறுதியில் பொருளாதார மந்த நிலைக்கு கொண்டு சென்றது.


இவை எல்லாம் சேர்ந்து, தற்போது மிகவும் சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எளிதான விடை இல்லை.சரக்கு மற்றும் சேவை வரி சம்பந்தமாக, தனியார் துறைக்கு வழங்க வேண்டிய பணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதுவும் மந்த நிலைக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால், அதிகாரிகள் இதை சரி செய்வதற்கான முயற்சியில் விரைந்து ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர்கள் தீவிரமாக எடுத்து வருகின்றனர்.


தனியார் துறைக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தராமல் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை எதுவும் அரசுக்கு கிடையாது.இதை முறைப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.யாரும், யாரையும் நம்புவதாக இல்லை. தனியார் துறைக்குள், யாரும், யாரை நம்பியும் கடன் கொடுக்க தயாராக இல்லை. அதேசமயம், எல்லாரும் அதிக பணத்தை கைவசம் வைத்திருக்கின்றனர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : அனில் அம்பானிக்கு சொந்தமான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் ஓர் அங்கமான, ஜி.சி.எக்ஸ்., எனும், ... மேலும்
business news
பிரயாக்ராஜ்: அடுத்த 6 ஆண்டுகளில் தங்களது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி டிரில்லியன் டாலராக கொண்டு வருவதே ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின், மொத்தவிலை பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாறுதலும் இன்றி, 1.08 சதவீதமாகவே இருப்பதாக, ... மேலும்
business news
சென்னை: கடந்த ஒரு வார காலமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று(செப்.,16) சவரன் ரூ.336 உயர்ந்துள்ளது.சென்னை, தங்கம் - ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
siriyaar - avinashi,India
23-ஆக-201919:35:05 IST Report Abuse
siriyaar making announcement without preparations is big error. why to electric car policy before production is not fully ready. now every one wait for electric car arrival since cost/ Km is much lower so people stopped buying new cat awaiting for electric car only expensive models in market so collapse of mechnical industry. however this can be reversed with good replacement policy with quick delivery and conversion kits markets can be speeded the situation can be made very positive fuel imports will go faster. good ling on automobiles through buyer needed.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)