பதிவு செய்த நாள்
23 ஆக2019
11:05

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் கடைசிநாளில் கடும் சரிவுடன் துவங்கின. சற்றுநேரத்திலேயே உயர்ந்தன. மேலும் ரூபாயின் மதிப்பும் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 345.55 புள்ளிகள் சரிந்து 36,127.38ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 94.30 புள்ளிகள் சரிந்து 10,647.05ஆகவும் வர்த்தகமாகின.
ஆட்டோமொபைல், எப்எம்சிஜி., வங்கி மற்றும் நிதி சார்ந்த பங்குகள் அதிகளவில் சரிந்ததாலும் ரூபாயின் மதிப்பு 72ஐ தாண்டியதாலும் இன்றைய வர்த்தகம் சரிந்தன.
இருப்பினும் சற்று நேரத்தில் சில நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் வர்த்தகம் ஏற்றம் கண்டன. காலை 11.மணியளவில் சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்ந்து 36,534.35ஆகவும், நிப்டி 29.25 புள்ளிகள் உயர்ந்து 10,770.60ஆகவும் வர்த்தகமாகின.
9 மாதங்களில் இல்லாத சரிவு
ரூபாயின் மதிப்பு கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்தது. வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22காசுகள் சரிந்து ரூ.72.03ஆக வர்த்தகமானது. காலை 11மணியளவில் 9 காசுகள் உயர்ந்து ரூ.71.72ஆக வர்த்தகமானது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.71.81ஆக வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|