பதிவு செய்த நாள்
13 செப்2019
00:18
நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஜூலை மாதத்தை விட, ஆகஸ்ட் மாதத்தில் சிறிது அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 3.15 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில், 3.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் சவுகரியமான நிலைக்குஉள்ளாகவே இருக்கிறது.
உணவு பொருட்கள் பணவீக்க விகிதம், கடந்த ஜூலை மாதத்தில், 2.36 சதவீதமாக இருந்தது. இதுவே, ஆகஸ்ட் மாதத்தில், 2.99 சதவீதமாக உள்ளது. சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 3.69 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்க இலக்கை, 4 சதவீதமாக, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திலும், ரிசர்வ் வங்கியின் இலக்கை மீறாமலே சில்லரை விலை பணவீக்கம் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|