பட்­ஜெட் போடு­வ­தில் தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்பட்­ஜெட் போடு­வ­தில் தவிர்க்க வேண்­டிய தவ­று­கள் ...  வீடுகளுக்கான தற்போதைய அறிவிப்பு போதவில்லை, நிர்மலா மேடம்! வீடுகளுக்கான தற்போதைய அறிவிப்பு போதவில்லை, நிர்மலா மேடம்! ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கமாடிட்டி சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
00:13

கச்சா எண்ணெய்

முந்­தைய இரு வார உயர்­வுக்­குப் பின், கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம் சரிந்து, வர்த்­த­கம் ஆனது. ஒரு பேர­லுக்கு, 4 அமெ­ரிக்க டாலர் வரை விலை சரிந்தது.


இந்த ஆண்­டின் ஆரம்­பத்­தி­லி­ருந்தே, உல­கின் மிகப் பெரிய பொரு­ளா­தா­ரத்தை கொண்ட நாடு­க­ளான, அமெ­ரிக்­கா­வும், சீனா­வும் வர்த்­தக மோதலை துவக்கி விட்­டன.ஜன­வரி முதல், ஆகஸ்ட் வரை­யி­லான கால­கட்­டத்­தில் மட்­டுமே, 10 முறைக்­கும் மேலாக, சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­க­ளுக்கு, இறக்­கு­மதி வரியை அதி­க­ரித்து அறி­வித்­துள்­ளது,
அமெ­ரிக்கா.


அதே­போல், சீனா­வும் பல முறை, அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­க­ளுக்கு அதிக வரி விதிப்பை அறி­வித்­தது.இந்த வர்த்­தக மோதல் போக்­கால், இரு நாடு­க­ளின் வளர்ச்­சி­யும் பாதிக்­கப்­படும் என்­ப­தா­லும், இதன் தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச அள­வி­லான பொரு­ளா­தார வளர்ச்சி குறை­யும் என்­ப­தா­லும், கச்சா எண்­ணெய் விலை பாதிப்­புக்­குள்­ளாகி வரு­கிறது.


வர்த்­தக மோதல் குறித்து, இரு நாட்டு தலை­வர்­களும், அதி­கா­ரி­களும் பல­முறை சந்­தித்து பேச்சு நடத்­தி­னர். இருப்­பி­னும், இதில் எந்த ஒரு முன்­னேற்­ற­மும் ஏற்­ப­ட­வில்லை. இந்­நி­லை­யில், கடந்த மாதம் இறக்­கு­மதி வரியை, இரு நாடு­களும் அதி­க­ரித்­தது. இருப்­பி­னும், வரும் நாட்­களில் மீண்­டும் பேச்சு துவங்­கும் என்ற எதிர்­பார்ப்பு தற்­போது ஏற்­பட்­டுள்­ளது.


ஈரான் மற்­றும் வெனி­சுலா ஆகிய நாடு­க­ளின் மீது, அமெ­ரிக்கா பொரு­ளா­தா­ரத் தடை விதித்­தி­ருந்­தது. இத­னால், இவ்­விரு நாடு­க­ளின் கச்சா எண்­ணெய் ஏற்­று­ம­தி­யும் பாதிப்­புக்கு உள்­ளா­னது. இத­னால், சந்­தை­யில் சிறி­த­ளவு தட்­டுப்­பாடு இருந்து வந்­தது.


இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வின், தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் ஈரா­னின் ஏற்­று­மதி, வரும் நாட்­களில் சந்­தைக்கு வரும் என்ற அறி­விப்பை வெளி­யிட்­டார். மேலும், எண்­ணெய் உற்­பத்தி நாடு­க­ளின் கூட்­ட­மைப்பு, கச்சா எண்­ணெய் தேவை குறைந்து வரு­வதை சுட்­டிக் காட்டி வரு­கிறது. இவ்­விரு கார­ணங்­க­ளால், கடந்த வாரம், கச்சா எண்­ணெய் விலை சரிந்து வர்த்­த­கம் ஆனது.


எண்­ணெய் உற்­பத்தி நாடு­க­ளின் கூட்­ட­மைப்­பான, ‘ஒபெக்’ அமைப்­பின் மாதாந்­திர அறிக்­கை­யில், உல­கின் ஒட்டு மொத்த கச்சா எண்­ணெய் தேவை, 2020ல் சரா­ச­ரி­யாக தின­சரி, 29.4 மில்­லி­யன் பேர­லாக இருக்­கும் என்ற கணிப்பை வெளி­யிட்­டுள்­ளது. இது, இந்த ஆண்­டின் சரா­சரி தேவையை விட, தின­சரி, 1.2 மில்­லி­யன் பேரல் குறை­வா­கும்.



உலக அள­வில், கச்சா எண்­ணெய் உற்­பத்­தி­யில், தற்­போது அமெ­ரிக்கா முத­லி­டம் வகிக்­கிறது. அமெ­ரிக்­கா­வின் தின­சரி ஏற்­று­மதி, 3 மில்­லி­யன் பேரல்­க­ளா­கும். இதற்கு முன், சவுதி அரே­பியா, உல­கின் முன்­னணி உற்­பத்தி நாடாக இருந்­தது. தற்­போது, இந்­நாடு இரண்­டாம் நிலை­யி­லும், ரஷ்யா மூன்­றாம் நிலை­யி­லும் உள்­ளன.


தங்கம் வெள்ளி



சர்­வ­தேச சந்­தை­யில், தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகியவற்­றின் விலை, கடந்த மூன்று வாரங்­க­ளாக சரிந்து, வர்த்­த­க­மாகி வரு­கிறது. நடப்பு ஆண்­டில், ஆகஸ்ட் மாதத்­தில், தங்­கத்­தின் விலை புதிய உச்­சத்தை தொட்­டது.


இருப்­பி­னும், அடுத்து வந்த நாட்­களில் விலை சரிந்­தது. இதற்கு முக்­கிய கார­ணம், வியா­பா­ரி­கள் லாபம் ஈட்­டு­வ­தற்­காக அதிக அள­வில் தங்­கத்தை விற்­பனை செய்­தது. அடுத்து, அமெ­ரிக்கா – சீனா இடை­யே­யான வர்த்­தக மோதல் குறித்த பேச்­சில், சுமுக நிலை ஏற்­படும் என்ற
எதிர்­பார்ப்­பா­லும், தங்­கத்­தின் விலை சரிந்­தது.


மே முதல், ஆகஸ்ட் வரை­யி­லான நான்கு மாதங்­களில், தங்­கத்­தின் விலை, சர்­வ­தேச சந்­தை­யில், 1 அவுன்ஸ், 300 அமெ­ரிக்க டால­ரும், எம்.சி.எக்ஸ்., பொருள் வாணிப சந்­தை­யில் சொக்க தங்­கம், 1 கிரா­முக்கு, 200 ரூபாய்க்கு மேலும் உயர்ந்­தது குறிப்­பி­டத்­தக்­க­தா­கும்.நான்கு மாத உயர்­வுக்கு பின், இந்த மாதம் ஆரம்­பம் முதலே, விலை சரிந்து வர்த்­த­கம் நடக்­கிறது.


இந்த வாரம் புதன் மற்­றும் வியா­ழன் ஆகிய நாட்­களில், அமெ­ரிக்­கா­வின் மத்­திய வங்கி, வட்டி விகி­தம் குறித்த கூட்­டத்தை நடத்­து­கிறது. கடந்த முறை நடை­பெற்ற கூட்­டத்­தில், வட்டி விகி­தத்தை குறைத்து அறி­வித்­தது, அமெ­ரிக்க மத்­திய வங்கி. இம்­மு­றை­யும் வட்டி விகி­தத்தை குறைத்து அறி­வித்­தால், தங்­கத்­தின் விலை மீண்­டும் அதி­க­ரிக்க வாய்ப்பு உள்­ளது.


அடுத்து வரும் கூட்­டத்­தில், வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­டு­வ­தற்கு வாய்ப்பு இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டா­லும், தங்­கத்­தின் விலை அதி­க­ரிக்­கும். ஆனால், இதற்கு மாறாக, எந்த ஓர் அறி­விப்பு வெளி­யா­னா­லும், தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை, மீண்­டும் குறை­வ­தற்­கான வாய்ப்­பு­களே அதி­கம்.


செம்பு


செம்பு, கடந்த வாரம் ஆரம்­பம் முதலே, விலை உயர்ந்து வர்த்­த­கம் ஆனது. சீன – அமெ­ரிக்க நாடு­களுக்கு இடையே நடந்து வரும், வர்த்­தக மோதல் குறித்த பேச்சு பல­ன­ளிக்­கும் என்ற எதிர்­பார்ப்­பில், பொருள் வாணிப சந்­தை­யில் கனி­மங்­க­ளின் விலை­யில் சிறி­த­ளவு உயர்வு
காணப்­பட்­டது.


இருப்­பி­னும், வர்த்­தக மோதல் தொடர்­பான விவ­கா­ரத்­தில், எந்த ஒரு சுமுக நிலை­யும் எட்­டப்­ப­டாத நிலையே தற்­போது உள்­ளது. உலக அள­வில், கனி­மங்­கள் மற்­றும் தொழிற்­சாலை மூல­தன பொருட்­களை, அதிக அளவு உப­யோ­கிக்­கும் நாடு சீனா. எனவே, இந்­நாட்­டின் ஏற்­று­மதி மற்­றும் இறக்­கு­மதி, கனி­மங்­க­ளின் விலை­யில் அதி­க­ள­வி­லான பாதிப்பு­களை ஏற்­ப­டுத்­தும்.வர்த்­தக மோதல் போக்­கால், சீனா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி குறை­யும் என்ற கோணத்­தில், கனி­மப் பொருட்கள் விலை குறைந்து வர்த்­த­க­மா­கிறது

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)