பதிவு செய்த நாள்
05 அக்2019
23:45

புதுடில்லி:ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம், பண்டிகை கால கொண்டாட்டத்தை ஒட்டி, 'எலக்ட்ரானிக்ஸ் திருவிழா'வை அறிமுகம் செய்துள்ளது.
இந்த தசரா திருவிழாவை முன்னிட்டு, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் மை ஜியோ ஸ்டோர்ஸ் ஆகியவை, அனைத்து பொருட்களுக்கும், 15 சதவீத கேஷ்பேக்கில் ஆரம்பித்து, உபரி பாகங்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் வழங்குகின்றன.அனைத்துக்கும் மேலாக, அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள், 1 கிலோ தங்கம், ஆடம்பர கார், மோட்டார் சைக்கிள், எல்.இ.டி., 'டிவி' லேப்டாப், ஐபோன் என, பலவற்றை வெல்லவும் வாய்ப்புள்ளது.
மேலும், 'ஏஜியோ வவுச்சர்' மற்றும் 'ஜியோ சவனு'க்கான, 6 மாத கால இலவச சந்தா
ஆகியவற்றையும் பெற வாய்ப்புஇருக்கிறது.
இந்த அனைத்து சலுகைகளும், 'டிவி' வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல் போன்,
லேப்டாப் உள்ளிட்ட அனைத்து பொருட்களை வாங்கும்போதும் கிடைக்கும் என
அறிவித்து உள்ளது, ரிலையன்ஸ் டிஜிட்டல்.இந்த எலக்ட்ரானிக்ஸ் திருவிழா, 5ம் தேதியில்
இருந்து, 8ம் தேதி வரை நடைபெறுகிறது.எலக்ட்ரானிக்ஸ் சில்லரை விற்பனை நிறுவனமான, ரிலையன்ஸ் டிஜிட்டல், 6,700 நகரங்களில் கால்பதித்துள்ளது. இதற்கு, நாடெங்கிலும், 370க்கும் மேற்பட்ட மிகப்பெரிய டிஜிட்டல் ஸ்டோர்களும், 7,700 ஜியோ ஸ்டோர்களும் உள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|