தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவீதமாக சரி்ந்தது தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவீதமாக சரி்ந்தது ...  ஜியோ புதிய கட்டணம் பி.எஸ்.என்.எல்., குஷி ஜியோ புதிய கட்டணம் பி.எஸ்.என்.எல்., குஷி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகன விற்பனை செப்டம்பரில் 23.69 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2019
23:39

புதுடில்லி:உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை, செப்டம்பர் மாதத்தில், 23.69 சதவீதம் சரிந்துள்ளதாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ’சியாம்’ தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்தகூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

கார் விற்பனை

கடந்த செப்டம்பரில், உள்நாட்டில், பயணியர் வாகன விற்பனை, 23.69 சதவீதம் சரிவை கண்டுள்ளது. இம்மாதத்தில் மொத்தம், 2.23 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில், 2.93 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.


கடந்த, 11 மாதங்களாக, தொடர்ந்து வாகனங்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டு வருகிறது.உள்நாட்டில் கார் விற்பனை, செப்டம்பரில், 33.4 சதவீதம் சரிந்து மொத்தம், 1.31 லட்சம் கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 1.97 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



மோட்டார் சைக்கிள் விற்பனையை பொறுத்தவரை, கடந்த மாதத்தில், 23.29 சதவீதம் சரிவு ஏற்பட்டு, மொத்தம், 10.44 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில், 13.60 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



வர்த்தக வாகனம்

இரண்டு சக்கர வாகனங்கள் பிரிவில், 22.09 சதவீதம் சரிவு கண்டு, 16.57 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில், 21.26 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.வர்த்தக வாகனங்களைப் பொறுத்தவரை, 39.06 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், 95 ஆயிரத்து, 870 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த செப்டம்பரில், 58 ஆயிரத்து, 419 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.


வாகனங்களின் பதிவை பொறுத்தவரை, கடந்த செப்டம்பரில், 22.41 சதவீதம் சரிவு ஏற்பட்டு, 20.04 லட்சம் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு செப்டம்பரில் மொத்தம், 25.84 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு சியாம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)