‘வோடபோன் ஐடியா’வின் நிலை ‘ஏர்டெல்’லுக்கு சாதகமாக உள்ளது‘வோடபோன் ஐடியா’வின் நிலை ‘ஏர்டெல்’லுக்கு சாதகமாக உள்ளது ...  விடை சொல்லுமா பட்ஜெட் விடை சொல்லுமா பட்ஜெட் ...
‘கார்ப்பரேட்’ வரியை எல்லா நிறுவனங்களுக்கும் குறைக்கணும் மத்திய அரசுக்கு இந்திய தொழிலக கூட்டமைப்பு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2019
23:57

புது­டில்லி:‘கார்ப்­ப­ரேட்’ வரி விகி­தத்தை, அனைத்து நிறு­வ­னங்­க­ளுக்­கும், 15 சத­வீ­த­மாக குறைக்க வேண்­டும் என, இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்­பான, சி.ஐ.ஐ., பட்­ஜெட்டை
முன்­வைத்து, அர­சி­டம் கோரிக்கை வைத்­துள்­ளது.

தேவையை அதி­க­ரிப்­ப­தற்­கும், வளர்ச்­சியை துாண்டு­வ­தற்­கும், தனி­ந­பர் வரு­மான வரியை குறைப்­ப­தோடு, கார்ப்­ப­ரேட் வரியை, மூன்று ஆண்டு காலத்­துக்கு, அனைத்து
நிறு­வ­னங்­க­ளுக்­கும், 15 சத­வீ­த­மாக குறைக்க வேண்­டும் என, இவ்­வ­மைப்பு கோரிக்கை
வைத்­துள்­ளது.

பரிந்துரை


வரு­வாய் துறை செய­லர் அஜய் பூஷண் பாண்டே உட­னான, பட்­ஜெட்­டுக்கு முந்­தைய
ஆலோ­சனை கூட்­டத்­தில் பங்­கேற்ற, இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு, நுகர்வு மற்­றும்
முத­லீ­டுக்கு உத்­வே­கம் அளிப்­ப­தில், அதிக கவ­னம் செலுத்த பரிந்­துரை செய்­துள்­ளது.சீரான தன்­மையை கொண்டு வரும் வகை­யில், அனைத்து நிறு­வ­னங்­க­ளுக்­கும் கார்ப்­ப­ரேட் வரி,
15 சத­வீ­த­மாக மாற்­றப்­பட வேண்­டும்.

எந்த விதி­வி­லக்­கு­களும், சலு­கை­களும் இல்­லா­மல், 2023ம் ஆண்டு வரை, கார்ப்­ப­ரேட் வரியை அனைத்து நிறு­வ­னங்­க­ளுக்­கும், 15 சத­வீ­த­மாக மாற்ற வேண்­டும் என, இக்­கூட்­டத்­தில் இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு பரிந்­து­ரைத்­துஉள்­ளது.

நடப்பு நிதி­யாண்­டின் இரண்­டா­வது காலாண்­டில், நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, ஆறாண்­டு­களில் இல்­லாத அள­வாக, 4.5 சத­வீ­த­மாக குறைந்­தது. இதை­ய­டுத்து, பொரு­ளா­தார வளர்ச்­சியை அதி­க­ரிக்­கும் வகை­யில், பல்­வேறு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களில் மத்­திய அரசு இறங்­கி­யது.சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களின் ஒரு பகு­தி­யாக, கடந்த செப்­டம்­ப­ரில், கார்ப்­ப­ரேட் வரியை, 30 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 22 சத­வீ­த­மாக மத்­திய அரசு குறைத்து அறி­வித்­தது. மேலும், புதி­தாக அமைக்­கப்­படும் தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு, கார்ப்­ப­ரேட் வரி, 15 சத­வீ­த­மாக
இருக்­கும் என்­றும் அறி­வித்­தது.

இதன் கார­ண­மாக, முத­லீட்­டா­ளர்­கள் நம்­பிக்கை அதி­க­ரித்து, முத­லீ­டு­களும் அதி­க­ரிக்க துவங்கி உள்­ளது. இந்­நி­லை­யில், அனைத்து நிறு­வ­னங்­க­ளுக்­கும் கார்ப்­ப­ரேட் வரியை,
15 சத­வீ­த­மாக குறைக்க வேண்­டும் என்ற கோரிக்­கையை வைத்­துள்­ளது, இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு.

விவசாயிகள்

அத்­து­டன் நுகர்­வோர் நம்­பிக்­கையை அதி­க­ரித்து, அவர்­களின் செல­வி­னங்­களை அதி­க­ரிக்­கத் துாண்டும் வகை­யில், விவ­சா­யி­க­ளுக்கு, 4,000 ரூபாய் அள­வுக்கு நேரடி பணப் பலனை வழங்க வேண்­டும் என்­றும் தெரி­வித்­துள்­ளது.இது குறித்து, சி.ஐ.ஐ., மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:
நுகர்வு தேவையை அதி­க­ரிக்க வேண்­டும் என்­றால், அடித்­தட்டு மக்­க­ளி­டம்
செல­வ­ழிப்­ப­தற்­கான வரு­மா­னம் வர வேண்­டும். எனவே, தனி­ந­பர் வரு­மான வரியை, அரசு குறைக்க வேண்­டும்.


இதன் மூலம், அவர்­க­ளி­டம் செல­வ­ழிப்­ப­தற்­கான பணம் அதி­க­ரிக்­கும். இந்த தொகை,
குடும்­பங்­களின் செலவு மற்­றும் சேமிப்­புக்கு வழி­வ­குக்­கும்; நுகர்வு தேவை­யும் அதி­க­ரிக்­கும்.மேலும் மத்­திய நேரடி வரி வாரி­யம், ஓய்வு பெற்ற மூத்த அதி­கா­ரி­கள் மற்­றும் அனு­ப­வம்
மிக்­க­வர்­க­ளைக் கொண்டு, ஒரு மத்­தி­யஸ்த நிபு­ணர் குழுவை உரு­வாக்­க­லாம்.இவர்­கள் மூலம், மதிப்­பீட்­டுக் கட்­டத்­தி­லேயே குறிப்­பிட்ட காலக்­கெடு­வுக்­குள் வரிச் சச்­ச­ர­வு­களை தீர்க்க முயற்சிசெய்­ய­லாம்.

கிரா­மப்­புற தேவையை அதி­க­ரிக்­கும் வகை­யில், ‘பிர­தம மந்­திரி கிஸான்’ திட்­டத்­தின் மூலம், இரண்டு தவ­ணை­க­ளாக விவ­சா­யி­க­ளுக்கு, 4,000 ரூபாயை வழங்­க­லாம். இது, கிரா­மப்­புற
நுகர்­வோர்­க­ளுக்குபய­னு­டை­ய­தாக இருக்­கும்.கூடவே, கிரா­மப்­புற உள்­கட்­ட­மைப்பை,
கிரா­மப்­புற சாலை­களை மேம்­ப­டுத்­த­லாம். நீர்ப்­பா­ச­னம் உள்­ளிட்ட வேளாண் சந்தை உள்­கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­து­வது குறித்­தும் அரசு பரி­சீ­லிக்­க­லாம்.

அடுத்த நிதி­யாண்­டுக்­கான சுங்க வரியை தற்­போ­தி­ருக்­கும், 10 சத­வீத உச்ச விகி­தத்­து­டன்
தொட­ர­லாம்.இவ்­வாறு இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)