என்ன செய்யும் 2020? என்ன செய்யும் 2020? ...  சந்தையின் புத்தாண்டு எதிர்பார்ப்புகள்! சந்தையின் புத்தாண்டு எதிர்பார்ப்புகள்! ...
சந்தையின் புத்தாண்டு எதிர்பார்ப்புகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2019
05:36

ஒரு ஆண்டு நிறைவுற்று, இன்னொரு ஆண்டு துவங்கும் போது, சந்தையின் முதலீட்டு எதிர்பார்ப்புகளும் புதுப்பிக்கப்படும். முதலீட்டு ஆலோசகர்கள் புதிய வியூகம் அமைத்து, தங்கள் எண்ணங்களை வெளியிடுவார்கள்.

புதிய ஆண்டில் வெற்றி காண கூடிய பங்குகளின் பெயர்களை யூகிப்பார்கள்.தன்னுடைய எண்ணங்கள், சந்தையின் சிந்தனை போக்கில் இடம் பெறச் செய்ய, அனைத்து பெரு முதலீட்டாளர்களும் விரும்புவார்கள். முடிந்த ஆண்டில் வெற்றி கண்ட சிந்தனையாளர்களின் எண்ணங்கள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். அவர்கள், அடுத்த ஆண்டை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற ஆர்வம், சந்தையில் வெளிப்படும்.

ஆனால், 2019ம் ஆண்டின் முதலீட்டு ஆருடங்கள் அனைத்தும் தவறாக அமைந்து விட்டன. இதனால், அடுத்த ஆண்டில் யாருடைய ஆருடங்கள் வெல்லும் என்பதில் குழப்பம் தெரிகிறது. 2019ம் ஆண்டுக்கு இன்னொரு தனித்துவம் உண்டு. இது ஒரு தசாப்தத்தின் நிறைவு ஆண்டாக அமைவது அதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.கடந்த தசாப்தம் பங்கு முதலீட்டாளர்களுக்கு செல்வம் சேர்க்கும் காலகட்டமாக அமைந்தது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அதன் துவக்கம் ஓர் இருண்ட சூழலாக இருந்தாலும், தொடர்ந்து, 2013 – -14 முதல் மாற்றம் கண்டது. 2014- – 17, பங்கு முதலீட்டிற்கு ஒரு பொற்காலம் என்றால் அது மிகையல்ல.2018 – -19 ஆண்டுகளில் சந்தையின் பெரும்பான்மை முதலீட்டாளர்கள் லாபம் ஈட்ட தவறினா லும், முந்தைய கால பங்கு வளர்ச்சி மட்டுமே, இந்த தசாப்தத்திற்கு ஒரு சிறப்பு அந்தஸ்தை தந்துள்ளது.வரும், 2020ல் துவங்கும் புதிய தசாப்தத்தை முதலீட்டாளர்கள் ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டு எதிர்நோக்குகிறார்கள். எப்படியும் பொருளாதார வளர்ச்சி மீண்டும் திரும்பி, நாட்டின் முதலீட்டு முக்கியத்துவத்தை உலக அரங்கில் நிலை நாட்டும் என்ற பரவலான எதிர்பார்ப்பு முதலீட்டு உலகில் இருக்கிறது.

இதுவே, பொருளாதார குறியீடுகள் சரியில்லாத சூழலிலும், முதலீட்டு ஆர்வம் சற்றும் குறையாததற்கு காரணம்.2020ல் வேகம் பிடித்து, பெரும் சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் நமக்கு அரசு தொடர்ந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அந்த கட்டாயம்தான், அடுத்த பட்ஜெட்டில் வரக்கூடிய முக்கிய மாற்றங்களுக்கு விதையாக அமையும்.வரி மாற்றங்கள், முதலீட்டு கொள்கை மாற்றங்கள், எளிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்கள், குறைந்த வட்டி விகிதங்கள், ஏற்றுமதி சலுகைகள், இறக்குமதிக்கு மாற்றாக உற்பத்தி செய்ய ஊக்கத் திட்டங்கள் என பல தரப்புகளில், அரசு அறிவிப்புகளை வெளியிடும் என சந்தை நினைக்கிறது.கிட்டத்தட்ட சீர்திருத்தத்தின் இரண்டாம் கட்டம் 2020ல் துவங்கும் என சந்தை நினைக்கிறது.

இந்த நம்பிக்கை பட்ஜெட்டில் மேலும் உறுதி செய்யப்பட்டால், வரும் காலங்களில் சந்தை வளர்ந்து, முதலீட்டாளர்களுக்கு ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என்பது உறுதி. தனிநபர் வருமான வரி மாற்றங்களும் உறுதியாக வரும் என்றே தோன்றுகிறது.இப்படி பல அறிகுறிகள், வருங்காலத்தை பற்றி நம்பிக்கை கொடுப்பதால், நிகழ்காலத்தை கடந்து செல்ல சந்தை தயாராகி விட்டது தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் டிசம்பர் 30,2019
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)