பதிவு செய்த நாள்
11 ஜன2020
00:01

புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனத்தின் ஓய்வூதியம் மற்றும் குழு திட்டங்கள் பிரிவில் மட்டும், பிரீமியம் வருவாய், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, சாதனை படைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், எல்.ஐ.சி.,யின் ஓய்வூதியம் மற்றும் குழு திட்டங்கள் பிரிவில், பிரீமியம் மூலமான வருவாய், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.எல்.ஐ.சி., நிறுவனத்தின் இப்பிரிவு, இவ்வளவு அதிக தொகையை, பிரீமியம் மூலமாக பெற்றிருப்பது இதுவே முதல் முறை. சரித்திரத்தில் முதன் முறையாக, அந்த சாதனையை எல்.ஐ.சி., நிறுவனம் செய்திருக்கிறது.
எல்.ஐ.சி.,யின் ஓய்வூதியம் மற்றும் குழு திட்டங்கள் பிரிவு, ஊழியர்களின் ஓய்வூதிய நிதிகளுக்கான மேலாண்மை தீர்வு உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த பிரிவு, பல்வேறு திட்டங்கள் மூலமாக, 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிமான தொகையை நிர்வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|