பதிவு செய்த நாள்
13 ஜன2020
00:21

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே, உயர்ந்து வருகிறது. எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் ரஷ்யா ஆகியவை இணைந்து, உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, விலை சரிவை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில், உற்பத்தியை மேலும் குறைக்க இருப்பதாக, கடந்த டிசம்பரில் அறிவித்தன.
இதன் காரணமாக, டிசம்பர் முதல் வாரம் வரை, விலை உயர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய வாரத்தில், அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூளும் என்ற
அச்சத்தில், மளமளவென விலை உயர்ந்தது. இருப்பினும், அமெரிக்காவின் எண்ணெய்
உற்பத்தி மற்றும் இருப்பு அதிகரித்ததன் காரணமாக விலை சரிவு ஏற்பட்டது.
அமெரிக்காவில் இயங்கிவரும் ஆழ்குழாய்கிணறுகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம்உள்ளது. சவுதி அரேபியா, ரஷ்யாமற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மொத்த
உற்பத்தி, ஒட்டு மொத்த உலகின் நுகர்வு தேவையில், 60 சதவிகிதத்தை பூர்த்தி செய்கிறது.
தங்கம் வெள்ளி
சர்வதேச சந்தையில், கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து, வர்த்தகம் ஆகிவந்தது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல் காரணமாக, தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. ஆனால், கடந்த வாரம் வியாழனன்று, ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க பார்லிமென்டின் அனுமதி கிடைக்காத காரணத்தால், போர் அபாய சூழல் தணிந்தது. இதன் காரணமாக, தங்கம் விலை சற்று சரிந்து வர்த்தகம் ஆனது.
வர்த்தக இறுதி நாளான வெள்ளியன்று, அமெரிக்காவில், புதிதாக பணியில் அமர்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த புள்ளிவிபரம் வெளியானது. அதில், எதிர்பார்த்ததை விட, எண்ணிகை குறைவாக இருந்தது. இதன் காரணமாக, அமெரிக்கநாணயத்தின் மதிப்பில் சரிவு ஏற்பட்டது.
இதன் விளைவாக, பொருள் வாணிப சந்தையில், டாலருக்கு நிகரான அனைத்து கமாடிட்டி பொருட்களின் விலையும் சற்று உயர்ந்தது. இதில், தங்கம் மற்றும் வெள்ளி விலையும்
அதிகரித்து வர்த்தகமாகி, முடிவுற்றது.
வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கடந்த டிசம்பர் மாதத்தில், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் முதல்கட்ட பேச்சு
நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் விளைவாக, இரு நாட்டு தலைவர்களும், இம்மாதம், 15ம் தேதிக்கு மேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.இதனால், இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவுக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
உள்நாட்டு ஆபரண சந்தையில், தங்கம் விலை, 1 பவுன், 31,000 ரூபாயைக் கடந்தது. டாலருக்கு
நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வு ஆகிய இவ்விரு காரணங்களால், நம் உள்நாட்டு சந்தையில், தங்கம் விலை அதிகரித்தது.
செம்பு
செம்பு, வாரத்தின் ஆரம்பம் முதலே, விலை உயர்ந்த போக்கில் வர்த்தகம் ஆனது. சீனா
மற்றும்அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பேச்சு, பலம் பெறும் என்ற
எதிர்பார்ப்பில், பொருள்சந்தையில், கனிமங்களின் விலையில் சிறிதளவு உயர்வு காணப்பட்டது.
தற்போது முதல் படியாக, சீனா இறங்கி வந்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும், இரு முக்கிய பொருட்களுக்கு, இறக்குமதி வரியை விலக்கியுள்ளது. இதனால்,சந்தையில் சாதகமானசூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இரு நாடுகளுக்கு இடையே உறவு சீரடையும் என்பதினாலும், செம்பு விலையில் உயர்வு காணப்பட்டது.உலகில், அதிக அளவில் செம்பு உலோகத்தை, தொழிற்சாலைக்கு பயன்படுத்தும் நாடு,சீனாவாகும். அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்வைத்தே, பெரும்பாலானகமாடிட்டிபொருட்களின் விலை மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|