பதிவு செய்த நாள்
16 ஜன2020
01:45

புதுடில்லி:அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, ஜெப் பெசோஸ் நேற்று, இந்தியாவில் உள்ள, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை, டிஜிட்டல்மயமாக்குவதற்கு, 7,100 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜெப் பெசோஸ், இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், அமேசான் நிறுவனம், தனது உலகளாவிய தளத்தை பயன்படுத்தி, 2025ம் ஆண்டில், 71 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை, ஏற்றுமதி செய்யும் என்றும் தெரிவித்தார்.
மேலும், 21ம் நூற்றாண்டை பொறுத்தவரை, இந்தியா அமெரிக்கா கூட்டு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மின்னணு வர்த்தகத்தில், அமேசான் வழங்கும் அதீத தள்ளுபடிகள் உள்ளிட்டவை குறித்து, உள்நாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி வரும் நிலையில், ஜெப் பெசோஸ் இத்தகைய உறுதிமொழிகளை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|