பதிவு செய்த நாள்
25 ஜன2020
06:43

மும்பை: சிற்றுண்டி, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான, ‘சமோசா சிங்’ 19 கோடி ரூபாய் நிதியை திரட்டி இருக்கிறது.
பெங்களூரை அடிப்படையாக கொண்ட, சமோசா சிங் நிறுவனம், சமோசா தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது, அதன் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக, நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதையடுத்து, பெண்கள் நடத்தும் தொழில்களுக்கு ஆரம்பகட்ட நிதியுதவிகளை வழங்கி வரும், ‘ஷி கேப்பிட்டல் வெஞ்சர்ஸ்’ நிறுவனம், சமோசா சிங் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.மேலும் பயர்சைடு வெஞ்சர்ஸ், ஜப்பானைச் சேர்ந்த ஏ.இ.டி., பண்டு மற்றும் ஏ.எல்., டிரஸ்ட் ஆகியவையும் இந்நிறுவனத்திற்கு நிதியுதவி செய்துள்ளன.
நிதி சிங் என்பவர், தன் கணவர் ஷிகார் வீர் சிங்குடன் இணைந்து, 2016ம் ஆண்டில் வசித்து வந்த பிளாட்டை விற்று, சமோசா சிங் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கினார்.தற்போது, சமோசா சிங், பெங்களூரு மற்றும் ஐதராபாதில் இயங்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|