சீனா நழுவவிடும் ஆடை ஏற்றுமதி ஆர்டர்கள்: கோவை, திருப்பூர் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளுமா?சீனா நழுவவிடும் ஆடை ஏற்றுமதி ஆர்டர்கள்: கோவை, திருப்பூர் நிறுவனங்கள் ... ... வணிகத்தை எளிதாக்கும் ஜி.எஸ்.டி., வணிகத்தை எளிதாக்கும் ஜி.எஸ்.டி., ...
கடன் நெருக்கடியில் இருந்து மீள வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
18:13

நாட்­டின் உற்­பத்­தித்­து­றை­யில், ஐம்­பது சத­வீ­தப் பங்­க­ளிப்பை, குறு, சிறு, நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­கள் வழங்கி வரு­கின்­றன.

கடந்த ஆண்டு ஜன­வரி 1ம் தேதி நில­வ­ரப்­படி, 25 கோடி ரூபாய் வரை­யி­லான கடன்­க­ளைப் பெற்று நிலு­வை­யில் வைத்­தி­ருக்­கும் நிறு­வ­னங்­கள், அவற்றை ஒரு­முறை மறு­சீ­ர­மைப்பு செய்­து­கொள்­வ­தற்­கான வாய்ப்பை, மத்­திய அரசு வழங்­கி­யது.

இதன்­படி, நடப்பு மூல­த­னத்­துக்­கா­கப் பெற்ற கடன்­களை நீண்­ட­கா­லக் கடன்­க­ளாக மாற்­றிக்­கொள்­ளு­தல், நீண்ட காலக் கடன் செலுத்­து­வ­தற்­கான அவ­கா­சத்தை அதி­க­ரித்­துக்­கொள்­ளு­தல், வங்­கி­கள் ஏற்­க­னவே வாராக்­க­ட­னுக்­காக ஒதுக்­கி­யுள்ள தொகை­யு­டன் கடன் மறு­சீ­ர­மைப்­புக்­காக கூடு­த­லாக ஐந்து சத­வீ­தத் தொகையை ஒதுக்­கு­தல் போன்ற பயன்­கள், இதன் மூலம் கிடைத்­தன.அதே­ச­ம­யம், திருப்­பூ­ரில் உள்ள பின்­ன­லாடை நிறு­வ­னங்­கள், கோவை­யில் உள்ள சிறு, குறு நிறு­வ­னங்­கள் பல­வும் கடன் நெருக்­க­டி­யில் இருந்து இன்­னும் மீள­வில்லை. இத­னால், கடன் மறு­சீ­ர­மைப்­புக்­கான அவ­கா­சத்தை நீட்­டிக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்டு வந்­தது. மத்­திய பட்­ஜெட்­டில், இவர்­க­ளது கோரிக்கை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து, ரிசர்வ் வங்கி, கடன் மறு­சீ­ர­மைப்­புக்­கான அவ­கா­சத்தை வரும் டிச., 31ம் தேதி வரை நீட்­டித்­துள்­ளது.

இதற்கு, நாடு முழு­வ­தும் உள்ள குறு, சிறு, நடுத்­த­ரத் தொழில்­து­றை­யி­னர், பிர­த­மர் மோடி, மத்­திய அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­ம­னுக்கு, நன்றி தெரி­வித்­துள்­ள­னர். ஐந்து லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள், கடன் நெருக்­க­டி­யில் இருந்து மீள்­வ­தற்­கான வாய்ப்பு உரு­வா­கி­யுள்­ளது. கோவை, திருப்­பூர் மாவட்­டங்­களில் உள்ள பல்­வேறு நிறு­வ­னங்­க­ளுக்கு, இது நிச்­ச­யம் பலன் அளிக்­கும்.குறிப்­பாக, வங்­கிக்­க­ணக்கு முடக்­கம், புதிய கடன் வழங்க மறுப்பு, சொத்­து­க­ளைக் கைப்­பற்­றும் நட­வ­டிக்கை போன்ற நெருக்­க­டி­களில் இருந்து, நிறு­வ­னங்­கள் விடு­பட முடி­யும். ‘‘நிதி நெருக்­க­டி­யில் தவிக்­கும் நிறு­வ­னங்­கள், கட­னி­லி­ருந்து மீண்டு, இழந்த வர்த்­த­கத்தை மீட்­டெ­டுப்­ப­தற்­கான வாய்ப்பு உரு­வா­கி­யுள்­ளது. மத்­திய அரசு, ரிசர்வ் வங்­கி­யின் உத்­த­ரவை, வங்­கி­கள் முறை­யாக பின்­பற்­ற­வேண்­டும்’’ என்று கூறு­கி­றார், திருப்­பூர் ஏற்­று­ம­தி­யா­ளர் சங்­கத் தலை­வர் ராஜா­சண்­மு­கம்.இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு, தொழில்­து­றை­யில், சாதிக்க, நிறு­வ­னங்­கள் முனைப்பு காட்ட வேண்­டும்.

உத­விய ‘கடன் மேளா’வங்­கி­க­ளின் துணை­யின்றி, தொழில் நிறு­வ­னங்­க­ளின் வளர்ச்­சியை, எண்­ணிப் பார்க்க முடி­யாது. முத­லீடு, நடை­முறை மூல­த­னம் உட்­பட அனைத்து தேவை­க­ளுக்­கும் வங்கி கடன்­க­ளையே சார்ந்­துள்­ளன. மத்­திய அரசு, இதற்­கென, கோவை, திருப்­பூர் உட்­பட பல்­வேறு மாவட்­டங்­களில், ‘கடன் மேளா’வை நடத்­தி­யது. இதன் மூலம், கோடிக்­க­ணக்­கான ரூபாய் கட­னு­தவி, தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு, வழங்­கப்­பட்­டன. இதில், பெரி­தும் பயன்­பெற்­றவை, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள்­தான்.‘‘59 நிமி­டத்­தில் கடன் அனு­மதி, ‘முத்ரா’ திட்­டம் போன்­ற­வற்றை, மத்­திய அரசு செயல்­ப­டுத்தி வரு­கிறது. இதில், வாராக்­க­டன் பெருகி வரு­வது, கவ­லை­யைத் தரும் விஷ­யம். கடன் முறை­யா­கச் செலுத்­தும் நிறு­வ­னங்­க­ளுக்கு உட­ன­டி­யாக கூடு­தல் கடன் வழங்­கப்­பட்டு வரு­கிறது’’ என்­கின்­ற­னர், வங்கி அதி­கா­ரி­கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)