கடன் நெருக்கடியில் இருந்து மீள வாய்ப்புகடன் நெருக்கடியில் இருந்து மீள வாய்ப்பு ...  வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு 40 சதவீதம் அதிகரிப்பு வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு 40 சதவீதம் அதிகரிப்பு ...
வணிகத்தை எளிதாக்கும் ஜி.எஸ்.டி.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
18:16

கடந்த வாரங்­களில் வரு­மான வரி பிடித்­தம், சிறு­தொ­ழில் அமைப்­பு­க­ளுக்­கான கடன் வசதி, மானி­யங்­கள் குறித்து பார்த்­தோம். இப்­போது ஜி.எஸ்.டி.,யின் நுணுக்­கங்­க­ளை­யும் தெரிந்து கொள்­வோம்.
“ஒரே நாடு, ஒரே வரி” என்ற அடிப்­ப­டை­யில், 17 மறை­முக வரி­களை உள்­ள­டக்கி ஒரே வரி­யாக, ஜி.எஸ்.டி., (goods and services tax) நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு இரண்­டரை ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. இன்­றும் அது­கு­றித்த கேள்­வி­களும் விவா­தங்­களும் நீண்டு கொண்­டி­ருக்­கின்­றன. இந்­தி­யா­வின் ‘பிரம்­மாண்­ட­மான வரி சீர்த்­தி­ருத்­தம்’ என்று இதைச் சொல்­ல­லாம்.உல­கில் 160 நாடு­கள் ஜி.எஸ்.டி., வரி­வி­திப்பு முறையை பின்­பற்­று­கின்­றன. சில நாடு­களில் மத்­திய அரசு மட்­டும் ஜி.எஸ்.டி.,யை செயல்­ப­டுத்­து­கின்­றன. சில­வற்­றில் மாநி­லங்­கள் மட்­டுமே அமல்­ப­டுத்­து­கின்­றன. மேலும் சில நாடு­களில், மத்­திய மற்­றும் மாநில அர­சு­கள் இணைந்து இரட்டை ஜி.எஸ்.டி., முறையை செயல்­ப­டுத்­து­கின்­றன. பிரே­சில், கனடா போன்ற நாடு­கள், இரட்டை ஜி.எஸ்.டி.,யை செயல்­ப­டுத்­து­கின்­றன. இப்­போது இந்­தி­யா­வும் இதில் இணைந்­துள்­ளது.

ஜி.எஸ்.டி-.,க்கு முந்­தைய நடை­மு­றைப்­படி, உற்­பத்தி வரி, சேவை வரி ஆகி­ய­வற்றை மத்­திய அர­சும், மதிப்பு கூட்டு வரி, நுழைவு வரி, ஆடம்­பர வரி, கொள்­மு­தல் வரி உள்­ளிட்­ட­வற்றை மாநில அர­சு­களும் விதித்து வந்­தன. ஒரே வினி­யோ­கச் சங்­கி­லி­யில் பல்­வேறு பெயர்­களில் வரி வசூ­லிக்­கப்­பட்டு வந்­தது.ஒரு குறிப்­பிட்ட பொரு­ளுக்கு வரி என்­பது மத்­திய அர­சா­லும் மாநில அர­சு­க­ளா­லும் ஒரே நேரத்­தில் எப்­படி விதிக்­கப்­படும்? அதற்­கான விடை­தான் ஜி.எஸ்.டி.,

ஐந்தடுக்கு வரி நிலைகள்ஒரே மாநி­லத்­திற்­குள் சரக்கு மற்­றும் சேவை வினி­யோ­கிக்­கப்­ப­டும்­போது சரக்கு மற்­றும் சேவை வரி என்­பது இரண்டு வித­மாக விதிக்­கப்­பட்டு வசூ­லிக்­கப்­படும். மத்­திய ஜி.எஸ்.டி.,யை மத்­திய அரசு விதித்து வசூ­லிக்­கும், மாநில ஜி.எஸ்.டி.,யை மாநில அரசு விதித்து வசூ­லிக்­கும். மாநி­லங்­க­ளுக்கு இடையே சரக்கு மற்­றும் சேவை வினி­யோ­கிக்­கப்­ப­டும்­போது மத்­திய அரசு ஒருங்­கி­ணைந்த ஜி.எஸ்.டி.,யை விதித்து வசூ­லிக்­கும்.ஜி.எஸ்.டி., வரி விகி­தம், இந்­தி­யா­வில் 0 சத­வீ­தம், 5 சத­வீ­தம், 12 சத­வீ­தம், 18 சத­வீ­தம், 28 சத­வீ­தம் என 5 வித­மாக உள்­ளது. இதில் அதி­க­பட்­ச­மாக 28 சத­வீ­தம் என்­பது சொகுசு பொருட்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது. உலக நாடு­களில் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 10 சத­வீ­தம், இங்­கி­லாந்து 20 சத­வீ­தம், சிங்­கப்­பூர் 7 சத­வீ­தம் , மெக்­சிகோ 16 சத­வீ­தம், ஜெர்­மனி 19 சத­வீ­தம், ஜப்­பான் 8 சத­வீ­தம் என்று உள்­ளது.

ஜி.எஸ்.டி., எப்போது வசூலிக்கப்படும்?முந்­தைய முறை­யில், விற்­ப­னை­யின்­போது மட்­டுமே வரி வசூ­லிக்­கப்­பட்டு வந்­தது. ஜி.எஸ்.டி., சட்­டப்­படி, சரக்கு மற்­றும் சேவை­க­ளின் வினி­யோ­கம் நடந்த காலத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே வரி விதிக்­கப்­படும். இது வினி­யோக நேரம் (Time of Supply) எனப்­படும். வரி­வி­கி­தம், மதிப்பு மற்­றும் வரி செலுத்­து­வ­தற்­கான தேதி­கள் ஆகி­ய­வற்றை தீர்­மா­னிக்க இது உத­வு­கிறது.

ஜி.எஸ்.டி., எங்கு வசூலிக்கப்படும்ஜி.எஸ்.டி., மூலம் ஆரம்­ப­நிலை வரி முறை­யி­லி­ருந்து, நுகர்வு சார்ந்த வரி முறை­யாக மாறு­கிறது. இதன் விளை­வாக, வினி­யோ­க­மா­கும் இடம் வரி தீர்­மா­னிப்­ப­தில் முக்­கிய பங்கு வகிக்­கிறது. பொருளை வாங்­கு­ப­வர் எந்த மாநி­லத்­தில் இருக்­கி­றாரோ அந்த மாநி­லத்­திற்­கான ஜி.எஸ்.டி., வரி வசூ­லிக்­கப்­படும். இது வினியோக இடம் (Place of Supply) எனப்­படும். எந்த மாநி­லத்­துக்­குச் செல்ல வேண்­டிய வரி என்­ப­தைக் கண்­ட­றி­யவே வினி­யோக இடம் முக்­கிய இடத்­தைப் பெறு­கிறது. என்ன சரக்கு/ சேவை? எங்­கி­ருந்து அனுப்­பு­கி­றார்? அனுப்­பு­கி­ற­வர் யார்? பெறும் நபர் யார்? சரக்கு சென்று சேரும் இடம் எது? அல்­லது சேவை பெறும் இடம் எது? என்­பதை வரி கணக்­கி­டும் முன்பே தீர்­மா­னிக்­க­வேண்­டும்.ஒரு வினி­யோ­கம் மாநி­லத்­திற்­குள் நடை­பெ­றும் விநி­யோ­கமா அல்­லது மாநி­லங்­க­ளுக்­கி­டை­யே­யான விநி­யோ­கமா என்­பதை தீர்­மா­னிப்­பது எப்­படி?

வினி­யோ­கிப்­ப­வ­ரின் இடம் (Location of Supplier), வினி­யோ­கம் நடை­பெ­றும் இடம் (Place of Supply) ஆகிய இரண்­டினை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு ஒரு வினி­யோ­கம் மாநி­லத்­திற்­குள் நடை­பெ­றும் வினி­யோ­கமா அல்­லது இரு மாநி­லங்­க­ளுக்­கி­டை­யில் இடம் பெறும் வினி­யோ­கமா என்­பது தீர்­மா­னிக்­கப்­படும்.உதா­ர­ண­மாக, சென்­னை­யில் வியா­பா­ரம் செய்­யும் சோம்­நாத், ஈரோட்­டில் உள்ள ராஜா­ராம் என்­ப­வ­ருக்கு சரக்­கு­களை வினி­யோ­கம் செய்­கி­றார். இது ஒரே மாநி­லத்­திற்­குள் நடை­பெ­று­வ­தால் இதற்கு மத்­திய சரக்கு மற்­றும் சேவை வரி (சி.ஜி.எஸ்.டி.,), மாநில சரக்கு மற்­றும் சேவை வரி (எஸ்.ஜி.எஸ்.டி.,) செலுத்த வேண்­டும்.

ஈரோட்­டி­லி­ருந்து சில வேலைப்­பா­டு­க­ளுக்கு பிறகு அவர் குஜ­ராத்­திற்கு வினி­யோ­கம் செய்­கி­றார். இரு வேறு மாநி­லங்­க­ளுக்­கி­டையே வினி­யோ­கம் நடை­பெ­று­வ­தால் அவர் ஏற்­க­னவே செலுத்­திய உள்­ளீட்டு வரியை கழித்து கொண்டு ஒருங்­கி­ணைந்த மத்­திய சரக்கு மற்­றும் சேவை வரி (ஐ.ஜி.எஸ்.டி.,) செலுத்த வேண்­டும்.வினி­யோ­கிப்­ப­வ­ரின் இடம் மற்­றும் வினி­யோக இடத்­தின் இருப்­பி­டம் வேறு­வேறு மாநி­லத்­தில் இருந்­தால், வினி­யோ­கம் என்­பது மாநி­லங்­க­ளுக்­கி­டை­யே­யான (Inter-state) நடை­பெ­றும் வினி­யோ­கம் ஆகும்.

ஜி.எஸ்.டி.,யின் பலன்கள்ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­தின் மூலம் வரி மேல் வரி தவிர்ப்பு, வரி முறை­களில் வெளிப்­ப­டைத்­தன்மை, வினி­யோ­கத்­தின் தொடக்க நிலை­யில் செலுத்­தப்­பட்ட வரி குறித்த உள்­ளீட்டு வரி விவ­ரங்­கள் ஆகிய பலன்­களை பார்த்து வரு­கி­றோம்.இருப்­பி­னும் ஜி.எஸ்.டி., ஏரா­ள­மான நடை­முறை சவால்­க­ளை­யும் பிரச்­னை­க­ளை­யும் சந்­தித்து வரு­கிறது. அது­பற்றி வரும் கட்­டு­ரை­களில் காண்­போம்.
-ஆடிட்­டர் ஜி.கார்த்­தி­கே­யன்
வாசக வணி­கர்­களே உங்­கள் சந்­தே­கங்­களை எழுத வேண்­டிய இமெ­யில்: karthi@gkmtax.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)