தங்கம் விலை சவரன் ரூ.984 குறைந்ததுதங்கம் விலை சவரன் ரூ.984 குறைந்தது ...  தங்கம் இறக்குமதி 8.86 சதவீதம் குறைவு தங்கம் இறக்குமதி 8.86 சதவீதம் குறைவு ...
வரி சச்சரவா?சமாதானமே சந்தோஷம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2020
22:39

சண்­டையா, சமா­தா­னமா என்று கேட்­டால், எந்த ஒரு பிரச்­னைக்­கும் சமா­தா­னமே, சந்­தோ­ஷ­மான தீர்வு என்­பேன். பேசித்­தீர்க்க பல்­வேறு வழி­கள் இருக்­கும்­போது, சச்­ச­ர­வு­களை ஏன் நீட்­டித்­துக்­கொண்டே இருக்க வேண்­டும். அத­னால், கால விர­யம். பண விர­யம்­தான் மிச்­ச­மா­கும். நம் பக்­கம் நியா­யம்கிடைக்­கும் வரை பேச­லாம்.அது எட்­டி­ய­வு­டன் பிரச்­னை­களை தீர்க்­கும் வழி­கா­ண­லாம். போராட்­டங்­கள்­தான் வாழ்க்­கையைபுதுப்­பிக்­கிறது.
தொழி­ல­தி­பர்­கள், வர்த்­த­கர்­கள், தங்­கள் தொழில் பய­ணத்­தில் நிறைய சச்­ச­ர­வு­களை சந்­தித்­தி­ருப்­பார்­கள். அரசு துறை­க­ளு­டன், வர்த்­தக போட்­டி­யா­ளர்­க­ளு­டன், வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் ஏன் ஊழி­யர்­க­ளு­டன் கூட. சச்­ச­ர­வு­களை பேசித் தீர்ப்­பது ஒரு வணி­கக் கலை. இங்கே அப்­படி ஒரு சச்­ச­ர­வுக்­கான தீர்வு குறித்து காணப்­போ­கி­றோம்.
இது வரு­மான வரித்­து­றை­யு­டன் வணிக நிறு­வ­னங்­கள் / தனி நப­ருக்­கான வரி சச்­ச­ர­வு­கள் குறித்த இப்­போ­தைய கள நில­வ­ரம் குறித்து:கூடு­தல் வரி விதிக்­கலாம்தனி­ந­பர், தொழில் நிறு­வ­னங்­கள் ஆண்­டு­தோ­றும் வரு­மான வரி கணக்­கு­களை, வரு­மான வரித்­து­றைக்கு தாக்­கல் செய்­கி­றார்­கள். பல சம­யங்­களில், அவற்றை வரித்­து­றை­யி­னர் அப்­ப­டியே ஏற்­றுக்­கொள்­வ­தில்லை. அதி­கா­ரி­க­ளின் மதிப்­பீ­டு­களில், சில வரி­தா­ரர்­க­ளின் வரு­மா­னம் அதி­கம் எனக் கொள்­ளப்­படும். சில­ரின் செல­வு­களை முழு அள­வில் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள். இவை எல்­லாமே இரு தரப்­பும் தத்­தம் வரிச்­சட்­டங்­களை புரிந்து கொண்­டி­ருக்­கும் அள­வில் மாறு­படும்.
இது­போன்ற சந்­தர்ப்­பங்­களில், வரி­தா­ரர் கணக்­கிட்­டி­ருக்­கும் வரி தொகை­யைக்­காட்­டி­லும், கூடு­தல் வரி விதிக்­கப்­ப­ட­லாம். அப்­படி குறிப்­பி­டப்­படும் கூடு­தல் வரியை ஏற்­றுக்­கொள்­ளாத வரி­தா­ரர் மேல்­மு­றை­யீட்­டுக்கு செல்­ல­லாம் / சென்­றி­ருக்­க­லாம்.எப்படி நிகழ்கிறது?
வரி­தா­ரர் தாக்­கல் செய்­யும் கணக்கு விவ­ரங்­களை, வரு­மான வரித்­து­றை­யின் வரி அதி­காரி அல்­லது அந்த துறை­யின் உதவி ஆணை­யர் ஆகி­யோ­ரில் ஒரு­வர், வரி மதிப்­பீடு செய்­வார். தாக்­கல் செய்­யப்­பட்ட வரு­மா­னத்­தை­விட அதி­கம் காண்­பிக்­கப்­பட்டு, அது வரி­தா­ர­ருக்கு உடன்­பா­டில்லை என்­றால் மேல்­மு­றை­யீட்­டுக்­குச் செல்­ல­லாம். மேல்­மு­றை­யீடு ஆணை­யர், டிரி­பி­யூ­னல், ஐகோர்ட், சுப்­ரீம் கோர்ட் என்று படிப்­ப­டி­யாக, சட்­டத்­தின் பாதை­யில், மேல்­மு­றை­யீடு வழக்­கு­கள் பய­ணிக்­கும். இதில் ஏதா­வது ஒரு நிலை­யில் வரி­தா­ரர் / வரி அதி­கா­ரிக்கு திருப்தி வரும் பட்­சத்­தில் அத்­து­டன் சச்­ச­ர­வு­களை முடித்­துக்­கொண்டு அந்த பிரச்­னை­யில் இருந்து வெளி­யே­ற­லாம். அது இல்­லாத பட்­சத்­தில், நீண்ட காலம் அந்த சச்­ச­ர­வு­கள் நிலு­வை­யில் இருக்­கும். அது வரி­தா­ர­ருக்­கும் ஒரு சுமை.
சுப்­ரீம் கோர்ட் உட்­பட அனைத்து மேல்­மு­றை­யீட்டு அமைப்­பு­களில் சேர்த்து, இது­போன்ற வரு­மான வரி சச்­ச­ர­வு­கள், நாடு முழு­வ­தும், கிட்­ட­தட்ட 4.83 லட்­சம் வழக்­குள் நிலு­வை­யில் உள்­ளன. இதன்­மூ­லம் ரூ.9.36 லட்­சம் கோடி தொகை முறை­யீட்­டில் உள்­ளது.
நடப்பு நிதி­யாண்­டில், நேரடி (வரு­மான) வரி வசூல் இலக்கு, ரூ.13.35 லட்­சம் கோடி என மத்­திய அர­சால் நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், நாட்­டில் நில­வும் பொரு­ளா­தார மந்த நிலை கார­ண­மாக நேரடி வரி வசூல் எதிர்­பார்த்த அள­வில் இல்லை. இத­னால், வசூல் இலக்­கை­யும் குறைத்து, ரூ. 11.8 லட்­சம் கோடி என நிர்­ண­யித்­துள்­ளது. அந்த வசூல் இலக்கை அடைய, வரி சச்­ச­ரவு வழக்­கு­கள் கொண்ட வரி­தா­ரர்­கள் பய­ன­டைய, மேலும் ஒரு திட்­டத்தை மத்­திய நிதித்­துறை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதுவே, ‘’விவாத் சே விஸ்­வாஸ்’’ என்ற சமா­தான திட்­ட­மா­கும். அதன் பொருள், ‘‘சர்ச்சை இல்லை நம்­பிக்கை’’ என்­ப­தா­கும்.
அப­ரா­தம் கிடையாது
இந்த திட்­டத்­தின்­படி, எல்லா நிலை­க­ளி­லும், மேல்­மு­றை­யீடு நிலு­வை­யில் உள்ள வரு­மான வரி வழக்கு நடத்­தும் வரி­தா­ரர்­கள் பலன் பெற முடி­யும். இந்த திட்­டத்­தின் கீழ், 2020 ஜன­வரி 31 ம் தேதிக்கு முன்பு வரை நிலு­வை­யில் உள்ள வரு­மான வரி வழக்­கு­களில் மேல் முறை­யீட்டை கைவிட்டு, வரும் மார்ச் 31 ஆம் தேதிக்­குள் வரி செலுத்த முன் வரு­ப­வர்­கள் வரி மட்­டும் செலுத்­தி­னால் போதும். அப­ரா­தம் மற்­றும் வட்டி கிடை­யாது.
அது­போல், மார்ச் 31க்குள் வரி செலுத்த முடி­ய­வில்லை என்­றால், அடுத்த கட்­ட­மாக, ஜூன் 30க்கு முன் செலுத்­தி­னால், 110 சத­வீ­தம் வரி செலுத்­தி­னால் போதும். வட்டி, அப­ரா­தம் தள்­ளு­படி செய்­யப்­ப­டு­கிறது.
வரித்­துறை மேல்­மு­றை­யீடு செய்­தால், அது 50 சத­வீ­தம் ஆகும்.ஏற்­க­னவே விதிக்­கப்­பட்­டி­ருந்த வட்டி அப­ரா­தம் ஆகி­ய­வற்­றிற்கு இது, 25 சத­வீ­தம் ஆகும். மேல்­மு­றை­யீடு நிலு­வை­யில் இருக்­கும்­போது ஏற்­க­னவே வரி செலுத்தி, வழக்கு நடத்­து­ப­வர்­களும் இந்த திட்­டத்­தில் பல­ன­டைய முடி­யும். தேங்கி கிடக்­கும் நிலுவை வழக்­கு­க­ளை­யும், அத­னால் அர­சுக்கு வர வேண்­டிய வரி தொகை­களை வசூ­லிப்­ப­துமே இந்த திட்­டத்­தின் நோக்­கம்.
சுமூக தீர்வு
மத்­திய பட்­ஜெட் தாக்­க­லின்­போது, பிப்­ர­வரி மாதத்­தி­லேயே இந்த சட்ட மசோ­தாவை பார்­லி­மென்­டில் மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீ­தா­ரா­மன் தாக்­கல் செய்­த­போ­தும், மார்ச் முதல் வாரத்­துக்­குப்­பி­ற­கு­தான் இது சட்­ட­மாகி உள்­ளது. எனவே, இந்த திட்­டத்­தின் கீழ் பய­ன­டை­வ­தற்­கான கால அவ­கா­சம் (மார்ச் 31) மிக மிகக் குறைவு.
‘’விவாத் சே விஸ்­வாஸ்’’ திட்­டத்­தின் கீழ் விண்­ணப்­பிப்­ப­வர்­கள் வரு­மா­ன­வ­ரித்­துறை கமி­ஷ­ன­ரி­டம் விண்­ணப்­பிக்க வேண்­டும். அவர், இந்த திட்­டத்­தின் கீழ் வரி­தா­ர­ரின் மேல்­மு­றை­யீடு வரு­கிறது என்று ஒத்­துக்­கொள்­ளும் பட்­சத்­தில், 15 நாட்­க­ளுக்­குள் ஏற்­க­னவே செய்­யப்­பட்ட மேல்­மு­றை­யீட்டை வாபஸ் பெற்­றுக்­கொண்டு வரியை செலுத்தி அதற்­கான மதிப்­பீட்­டை­யும் பெற்­றுக்­கொள்­ள­லாம். இந்த திட்­டத்­தின் கீழ் பய­ன­டைய வரி­தா­ரர்­கள் தங்­கள் ஆடிட்­டரை அணு­க­லாம். அவர்­கள் இந்த பிரச்­னையை சுமூ­க­மாக தீர்க்க உத­வு­வார்­கள்.
வரி­தா­ரர்­க­ளுக்கு மட்­டு­மல்ல... இந்த திட்­டத்தை பயன்­ப­டுத்தி நிலுவை வழக்­கு­களை முடித்து, அரசு கஜா­னாவை நிரப்­பும் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­க­ளுக்­கும் பதவி உயர்வு / விருப்ப பணி­யிட மாற்­றங்­கள் என்ற இனிப்பு காத்­தி­ருக்­கிறது. இந்த திட்­டத்­தின்­படி, இந்த நிதி­யாண்­டில், மத்­திய அர­சுக்கு ரூ.1.5 லட்­சம் கோடி வரி வசூ­லா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கோவை, திருப்­பூர், ஈரோடு மட்­டு­மல்ல நாடு முழு­வ­தும் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் இந்த திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்த இப்­போதே கள­மி­றங்கி உள்­ளார்­கள். நிலுவை மேல்­மு­றை­யீட்டு வழக்­கு­களை முடிக்­கச் சொல்லி, ஆடிட்­டர்­க­ளுக்­கும் தொலை­பேசி அழைப்­பு­கள் சென்ற வண்­ணம் உள்­ளன.
நீட்­டிக்க கோரிக்கை
இந்த திட்­டத்தை பயன்­ப­டுத்த மார்ச் 31 ஆம் தேதி என்ற மிக குறு­கிய கால அவ­கா­சம், ‘கொரோனா’ வைரஸ் தாக்­கத்­தால் ஏற்­பட்­டுள்ள வர்த்­தக தேக்க நிலை போன்ற கார­ணங்­க­ளால் சிறிது தொய்வு ஏற்­ப­ட­லாம். அர­சின் முயற்சி பல­ன­ளிக்­க­வும், வரி­தா­ரர்­கள் பய­ன­டை­ய­வும் ஏது­வாக, இந்த திட்­டத்­துக்­கான காலக்­கெ­டுவை மேலும் நீட்­டிக்க வேண்­டும் என்­பதே வரி­தாரர்­கள் / வர்த்­தகர்­கள் / தொழி­ல­தி­பர்­கள் கோரிக்­கை­யாக உள்­ளது. வரி­தா­ரர்­க­ளுக்கு ‘‘நம்­பிக்கை’’ தரு­வ­து­தான் இந்த திட்­டத்­தின் நோக்­கம். நாமும், பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு மீது நம்­பிக்கை கொள்­வோம்.
யாருக்கு உடனடி பலன்?
அரசு சார்ந்த பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், பொதுத்­துறை, தனி­யார் துறை வங்­கி­கள் சார்­பில் நிலு­வை­யில் உள்ள மேல்­மு­றை­யீட்டு வரு­மான வரி வழக்­கு­கள் இந்த திட்­டத்­தின் கீழ் வேக­மாக தீர்க்­கப்­பட வாய்ப்பு அதி­கம் உள்­ளது. தனி­ந­பர் / தனி­யார் நிறு­வ­னங்­களும் இதை பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.
யாருக்கு பொருந்தாது?
வரு­மா­ன­வ­ரிச் சோத­னை­யின்­போது ரூ.5 கோடிக்கு அதி­க­மான வரி மதிப்­பீடு கொண்ட மேல்­மு­றை­யீடு வரி­தா­ரர்.வரு­மான வரி வழக்­கு­களில் தண்­டனை பரிந்­துரை செய்­யப்­பட்­ட­வர்­கள்.வெளி­நாட்டு சொத்­துக்­களை கணக்­கில் காட்­டா­த­வர்­கள்.சட்­டத்­துக்கு புறம்­பான வரு­மான வரி மேல்­மு­றை­யீடுபினாமி சட்­டத்­தின் கீழ் உள்­ள­வர்­கள்.
(தொழில் சுகம் தொட­ரும்)

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)