வீடு தேடி வரும் மது சேவையை துவக்கிய, ‘ஸ்விகி’வீடு தேடி வரும் மது சேவையை துவக்கிய, ‘ஸ்விகி’ ... தொழில் துவங்க ஏற்ற இடம் சென்னை தொழில் துவங்க ஏற்ற இடம் சென்னை ...
ஒரு லட்சம் டாக்டர்களுடன் டெலிமெடிசினில் ரிலையன்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2020
11:12

புது­டில்லி : ரிலை­யன்ஸ் நிறு­வ­னத்தை சேர்ந்த, ’நவ்­பு­ளோட்ஸ்’ நிறு­வ­னம், தொலை­தொ­டர்பு வச­தி­கள் மூலம் மருத்­துவ சேவை­களை பெற உத­வும் வணி­கத்­தில் இறங்கி
உள்­ளது.


‘நவ்­பு­ளோட்ஸ் டெக்­னா­ல­ஜிஸ்’ நிறு­வ­னத்தை, கடந்த ஆண்­டில், முகேஷ் அம்­பானி தலை­மை­யி­லான, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் கைய­கப்­ப­டுத்­தி­யது. இந்­நி­லை­யில், இப்­போது நவ்­பு­ளோட்ஸ், டெலி­மெ­டி­சின் சேவை­யில் இறங்க இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.மேலும், அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்­களில், இந்­நி­று­வன சேவை­யில், ஒரு லட்­சம் மருத்­து­வர்­கள் இணை­வர் என­வும் தெரி­வித்­துள்­ளது.கொரோனா வைரஸ் பர­வல் அதி­க­ரித்து வரும் நிலை­யில், மருத்­து­வர்­களை நேர­டி­யாக அணு­கு­வது என்­பது தற்­போது சிர­ம­மா­ன­தாக மாறி இருக்­கிறது. இப்­பி­ரச்­னையை தீர்க்­கும் வகை­யில், டெலி­மெ­டி­சின் சேவையை வழங்க முன்­வந்­துள்­ளது, நவ்­பு­ளோட்ஸ் நிறு­வ­னம்.இதன் தொடர்ச்­சி­யாக, மின்­னணு மருந்­த­கம், மருத்­துவ பரி­சோ­தனை மற்­றும் உடல் ஆரோக்­கி­யம் ஆகிய சேவை­க­ளை­யும் படிப்­ப­டி­யாக வழங்க திட்­ட­மிட்டு வரு­கிறது.


இது குறித்து, நவ்­பு­ளோட்ஸ் நிறு­வ­னத்­தின் ஆராய்ச்சி பிரிவு தலை­வர் நிகில் சால்­கர் கூறி­ய­தா­வது:தற்­ச­ம­யம், 6 ஆயி­ரம் மருத்­து­வர்­கள் எங்­க­ளு­டன் உள்­ள­னர். மருத்­துவ உதவி தேவைப்­ப­டு­வோர் ஆன்­லைன் வீடியோ மூல­மாக, மருத்­து­வ­ரி­டம் ஆலோ­சனை பெற்­றுக் ­கொள்­ள­லாம்.இதற்­காக தனி­யாக செயலி எதை­யும் தர­வி­றக்­கம் செய்ய வேண்­டி­ய­தில்லை. மருத்­து­வ­ரி­ட­மி­ருந்து வாட்ஸ் ஆப் உள்­ளிட்ட குறுஞ்­செய்­தி­க­ளுக்கு இணைப்பு வழங்­கப்­படும். அதை இணை­ய­த­ளம் மூலம் அணு­கிக் ­கொள்­ள­லாம். தேவை­யான மருத்­து­வர்­களை ஆன்­லைன் தேடல் மூலம் தேர்வு செய்­து ­கொள்ள முடி­யும். இவ்­வாறு அவர்கூறி­யுள்­ளார். மருத்­து­வர்­க­ளி­டம் இந்த சேவைக்­காக , ஒரு குறிப்­பிட்ட கட்­ட­ணத்தை, நவ்­பு­ளோட்ஸ் பெற்­றுக்­கொள்­ளும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கடந்த சனிக்கிழமையன்று, இந்தியாவிலும் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது. 3 கோடி முன்களப் ... மேலும்
business news
இந்தியர்கள் மத்தியில் ஆன்லைனில் காப்பீடு வசதியை நாடுவதற்கான ஆர்வம் அதிகரித்திருப்பது, ஆய்வில் தெரிய ... மேலும்
business news
வரி சேமிப்பு திட்டமிடலை மேற்கொள்ளும் போது, அனைத்து பிரிவுகளின் கீழ் பொருந்தக்கூடிய சலுகைகளை அறிந்திருப்பது ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த, 2020ம் ஆண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து, 7 ஆண்டுகளில் இல்லாத ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த, 1ம் தேதி முதல், 14ம் தேதி வரையிலான காலத்தில், 11 சதவீதம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)