பதிவு செய்த நாள்
04 ஜூன்2020
01:37

திருப்பூர்:தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக, 16 கோடி முக கவசம் தயாரிக்க, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களிடம், அரசு தரப்பில் வர்த்தக விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.இதற்காக, சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில், சென்னையில் கடந்த, 1ம் தேதி ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.
அரசின் அழைப்பை ஏற்று, திருப்பூர் ஆடை உற்பத்தி மற்றும் முக கவச தயாரிப்பாளர்கள், ஆறு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது: ரேஷன் கார்டு தாரர்களுக்கு கொடுப்பதற்காக, 16 கோடி முக கவசங்கள் தேவைப்படுவதாக கூறி, இவற்றை, திருப்பூர் நிறுவனங்களால் தயாரித்து வழங்க முடியுமா என, அரசு தரப்பில் சென்னையில் நடந்த கூட்டத்தில் கேட்கப்பட்டு உள்ளது.
பருத்தி இழை துணியில் தயாரித்து, குறைந்தபட்சம், ஆறு மாதம் வரை துவைத்து பயன் படுத்தும் வகையில், முக கவசம் இருக்க வேண்டும். விலை குறைவாக இருக்க வேண்டும் என, அரசு எதிர்பார்க்கிறது. ‘ஆர்டர்’கள், நிச்சயம் திருப்பூருக்கே கிடைக்கும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|