சீன பொருட்கள் புறக்கணிப்பில் எல் அண்டு டி நிறுவனம் சீன பொருட்கள் புறக்கணிப்பில் எல் அண்டு டி நிறுவனம் ... கொரோனா காலத்தில் இந்தியாவில் அதிகம் சொத்து சேர்த்தவர் கொரோனா காலத்தில் இந்தியாவில் அதிகம் சொத்து சேர்த்தவர் ...
கொரோனாவால் நாட்டின் சமத்துவமின்மை குறையும்: எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையில் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2020
13:36

மும்பை:கொரோனா தொற்­றுக்­குப் பின், நாட்­டில் நில­வும் சமத்­து­வ­மின்மை இடை­வெளி குறைந்­து­வி­டும். ஏனெ­னில், பணக்­கார மாநி­லங்­க­ளின் வரு­மா­னம், ஏழை மாநி­லங்­களை விட குறை­யக்­கூ­டும் என, எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்­கை­யான, ‘எகோவ்­ரேப்’ தெரி­வித்­துள்­ளது.மேலும், அகில இந்­திய அள­வில், தனி­ந­பர் வரு­மா­னம், நடப்பு நிதி­யாண்­டில், 5.4 சத­வீ­தம் அள­வுக்கு குறைந்து, 1.43 லட்­ச­மாக இருக்­கும் என்­றும், இந்த ஆராய்ச்சி அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, அறிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:
தனி­ந­பர் வரு­மா­னம்
கொரோனா தொற்­றுக்­குப் பின், நாட்­டில் சமத்­து­வ­மின்மை இடை­வெளி குறை­யும் என்று நாங்­கள் எதிர்­பார்க்­கி­றோம். ஏனெ­னில், பணக்­கார மாநி­லங்­க­ளின் வரு­மான வீழ்ச்சி, ஏழை மாநி­லங்­க­ளின் வரு­மான வீழ்ச்­சி­யைக் காட்­டி­லும் அதி­க­மாக இருக்­கும்.எந்த மாநி­லத்­தில், தனி­நபர் வரு­மா­னம், அகில இந்திய சரா­ச­ரியை விட அதி­க­மாக இருக்­கி­றதோ, அந்த மாநி­லம் பணக்­கார மாநி­லம் எனக் கரு­தப்­படும். இதற்கு முன், இப்­படி நடந்­த­தற்கு உதா­ர­ணம் இருக்­கிறது. 1989ம் ஆண்டு, ஜெர்­ம­னி­யில், ’பெர்­லின் சுவர்’ வீழ்ந்த போது, இதே போன்ற சமத்­து­வ­மின்மை சரி­வைக் காண நேர்ந்­தது.கொரோ­னா­வுக்கு பின், நாட்­டில் தனி­ந­பர் வரு­மான சரிவு விகி­தம், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி விகித சரி­வை­விட அதி­க­மாக இருக்­கும்.


மிக­வும் ஆபத்துடெல்லி மற்­றும் சண்­டி­கர் மாநி­லத்­தின் தனி­ந­பர் வரு­மா­னம், அகில இந்­திய சரா­ச­ரியை விட, மூன்று மடங்கு அதி­க­மாக சரி­யும். மொத்­தம் எட்டு மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளின் தனி­ந­பர் வரு­மா­னம், நடப்பு நிதி­யாண்­டில், இரட்டை இலக்க சரி­வைக் காணும். இது மிக­வும் ஆபத்­தா­னது.இந்த மாநி­லங்­க­ளின் பங்கு, நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், 47 சத­வீ­தம் ஆகும்.இந்த சரி­வுக்கு முக்­கி­ய­மான கார­ணம், நகர்ப்­பு­றங்­களில் ஊர­டங்கு கடு­மை­யாக செயல்­ப­டுத்­தப்­ப­டு­வ­து­ தான். சந்­தை­கள், வணிக வளா­கங்­கள் மற்­றும் மால்­கள் மூடப்­படு­வது, இந்த பகு­தி­க­ளின் வரு­மா­னத்தை மோச­மாக பாதித்­துள்­ளது.பல இடங்­களில், சந்­தை­க­ளைத் திறந்த பிற­கும், வாடிக்­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை, கொரோ­னா­வுக்கு முன் இருந்­ததை விட, 70 முதல், 80 சத­வீ­தம் வரை குறை­வா­கவே உள்­ளது.


உள்­நாட்டு உற்­பத்திநடப்பு நிதி­யாண்­டில், தமிழ்­நாடு, மஹா­ராஷ்­டிரா, குஜ­ராத், தெலுங்­கானா போன்ற மாநி­லங்­களில், தனி­ந­பர் வரு­மா­னம், 10 முதல், 12 சத­வீ­தம் வரை, சரி­வைக் காணும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.அதே­ச­ம­யம், மத்­தி­ய பிர­தே­சம், உத்­த­ர ­பி­ர­தே­சம், பீஹார், ஒடிசா போன்ற மாநி­லங்­களில், தனி­ந­பர் வரு­மான சரிவு, 8 சத­வீ­தத்­திற்­கும் குறை­வா­கவே இருக்­கும்.இந்த மாநி­லங்­களில், கொரோனா தாக்­கம் குறை­வாக இருக்­கும் பசுமை மண்­ட­லங்­கள் அதி­க­மாக இருப்­ப­தும், விவ­சாய நட­வ­டிக்­கை­கள் பாதிக்­கப்­ப­டா­த­தும், தனி­ந­பர் வரு­மா­னம் குறை­யா­மல் இருக்க கார­ண­மாக அமைந்­துள்­ளது.நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்­சி­யில், 6.8 சத­வீ­தம் அள­வுக்கு சரிவு இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு, எஸ்.பி.ஐ., ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)