பதிவு செய்த நாள்
24 ஜூன்2020
22:54
பெங்களூரு:மின்னணு வர்த்தக நிறுவனமான, ‘பிளிப்கார்ட்’ அதன் தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளையும் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, ஹிந்தி மொழியை பயன்படுத்தி, நுகர்வோர் பொருட்களை வாங்கும் வசதியை, பிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது.தற்போது, அதன் தொடர்ச்சியாக, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும், இனி நுகர்வோர்கள், நிறுவனத்தின் சேவைகளை
அணுகலாம்.
இது குறித்து, பிளிப்கார்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது:நுகர்வோர் ஆங்கிலத்தில்
மட்டுமின்றி; ஹிந்தியிலும் எங்கள் சேவைகளை அணுகும் வாய்ப்பை கடந்த ஆண்டில்
உருவாக்கி தந்தோம்.இப்போது, அதன் தொடர்ச்சியாக, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் மூலமாகவும், நிறுவன சேவைகளை நுகர்வோர் அணுகும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளோம்.
இதன் மூலம், பிராந்திய மொழியை மட்டுமே பயன்படுத்துபவர்கள், இனி, எங்களது அனைத்து விதமான சேவைகளையும், எந்த தடையும் இன்றி, எளிதாக அவர்கள் மொழியின்
மூலமாகவே பெற முடியும்.இவ்வாறு பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|