பதிவு செய்த நாள்
24 ஜூன்2020
23:07
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.3 சதவீதம் அளவுக்கு
குறையும் என்றும்; அடுத்த நிதியாண்டில், வளர்ச்சி திரும்பும் என்றும், ‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் அறிக்கையில் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட உற்பத்தியில் இடையூறு, வர்த்தக வினியோக பிரச்னைகள்,
சுற்றுலா, ஓட்டல் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் சரிவு ஆகிய காரணங்கள், நடப்பு
நிதியாண்டில், பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்ப அனுமதிக்காது. இதன் காரணமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், இதுவரை
வரலாற்றில் இல்லாத வகையில், 5.3 சதவீதம் அளவுக்கு குறைந்து, சரிவைக் காணும். நடப்பு நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் இந்த பாதிப்பை காண முடியும்.
நம் அண்மைக்கால சரித்திரத்தில், இது ஆறாவது கடுமையான வீழ்ச்சியாகும். இதற்கு முன், 1958, 1966, 1967, 1973, 1980 ஆகிய நிதியாண்டுகளில் பொருளாதாரம் மிகப் பெரிய வீழ்ச்சியை
சந்தித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி கடுமையான சரிவைக்
கண்டாலும், அடுத்த நிதியாண்டில், வளர்ச்சிமீண்டும் திரும்பும்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|